நடப்பு டி20 கிரிக்கெட் போட்டியுடன் ஓய்வை அறிவித்த முக்கிய வீரர்!

0
181

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ நடப்பு t20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகின்றார் இவர் இதுவரையில் 90 டி20 போட்டிகளில் விளையாடி ஆயிரத்து 245 ரன்கள் சேர்த்து 78 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார்.

சுமார் 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2200 ரன்களும், 86 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார். 164 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 2968 ரன்களும், 199 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், 38 வயதான அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார், நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்திருக்கிறார். இதன் மூலமாக ஆஸ்திரேலியாவுடன் நாளைய தினம் வெஸ்ட் இண்டீஸ் அணி மோதும் போட்டியே அவருடைய கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டி என்று சொல்லப்படுகிறது.

Previous articleபருவ மழையின் தீவிரம்! தமிழகத்தில் வேகமாக உயர்ந்து வரும் நீர்நிலைகளின் கொள்ளளவு!
Next articleஉலக அளவில் அதிகரித்து நோய் தொற்று பாதிப்பு!