கேஜிஎப் இரண்டாம் பாகத்தின் வெளியீட்டு தேதி மாற்றமா?

Photo of author

By Sakthi

கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தில் வெளியீடு தேதி மாற்றப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. முதல் பாகத்தின் மிகப்பெரிய வெற்றியை அடுத்து இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் பெரிய வரவேற்ப்பை பெற்றிருக்கிறது. பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் ஜூலை மாதம் 26ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தற்சமயம் நாடு முழுவதும் நோய் பற்றிய அச்சம் அதிகமாக இருப்பதன் காரணமாக, திரையரங்குகள் எப்போது செயல்படும் என்று தெரியவில்லை. ஆகவே கேஜிஎப் திரைப்படக் குழு இந்த திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை மாற்றுவதற்கு திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்குள் நோய் தொற்று தாக்கம் குறைந்து திரையரங்குகள் மறுபடியும் திறக்கப்பட்டால் திட்டமிட்ட தேதியில் படம் வெளியிடப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாசின் அவர்களின் வெறித்தனமான நடிப்பை காண்பதற்கு ரசிகர்கள் ஆவலாக இருந்த வருகிறார்கள். இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடித்து வருகின்றார். அதோடு பாலிவுட் நடிகை ரவீனா டண்டனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.