குஷ்புக்கு கோயில் கட்டியது எல்லாம் பைத்தியக்காரத்தனம்..!! குஷ்புவின் மாமியர் நச் பதில்..!!

0
476
Actress khushboo

Actress khushboo: தமிழ் சினிமாவில் தொன்னூறுகளின் தொடக்கத்தில் பலரின் கனவு கன்னியாக இருந்தவர் தான் குஷ்பு. தற்போது நடிகையாகவும், அரசியல்வாதியாகவும் இருக்கிறார். இவர் இயக்குநர் சுந்தர் சி திருமணம் செய்து கொண்டு இவருக்கு இரு மகள்கள் உள்ளனர்.

குஷ்பு தமிழ் திரைப்படங்கள் மட்டும் இல்லாமல், மலையாளம் , கன்னடம் போன்ற திரைப்படங்களில் நடித்து வந்தார். அரசியலில் பல விமர்சனங்களையும், கருத்துக்களையும் தெரிவித்து வரும் நடிகை குஷ்பு, தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவரின் கணவர் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருப்பார்.

இந்நிலையில் குஷ்புவும், அவரின் மாமியார் அதாவது சுந்தர் சி-யின் அம்மாவும் ஒரு பேட்டி ஒன்றில் பங்கேற்றனர். அப்போது அவரிடம் உங்கள் மருமகள் குஷ்புவிற்கு கோயில் கட்டினார்கள் (khushboo temple) அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர் அது எல்லாம் பைத்தியக்காரத்தனம் என்று நகைச்சுவையாக பதிலளித்தார். அதற்கு குஷ்பு வீட்டில் எப்போதும் உண்மை பேசும் ஒருவர் தேவை என சிரித்தப்படியே கூறினார். மேலும் குஷ்புவும், அவரின் மாமியாரும் இவர்கள் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துக்கொண்டனர்.

அப்போது குஷ்புவின் மாமியர், எனக்கும் என் மருமகளுக்கும் இடையில் சண்டை வராது என கூறினார். ஆனால் அதற்கு குஷ்பு அதெல்லாம் கிடையாது இருவருக்கும் இடையில் சண்டை வரும். ஆனால் அடுத்த நிமிடமே நாங்கள் மறந்து விடுவோம் என கூறினார்.

மேலும் படிக்க: ரியாஸ் physic ஆக தான் அந்த காட்சியை படத்தில் வைத்தேன்..!!

Previous articleசென்னையில் சிறுமிக்கு 6 மாதம் தொடர் பாலியல் வன்கொடுமை – அண்ணன் உள்ளிட்ட மூவர் செய்த கொடூரத்தின் பின்னணி!
Next articleஅங்கவை, சங்கவை.. இவர்கள் யாரென்று தெரியாமல் கலாய்த்து விட்டோமே.!!