பாட்ஷா பட விழாவில் தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் வந்துவிட்டது என பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் மூலம் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவையும் ரஜினி பகைத்துக்கொண்டார். எனவே, ரஜினி அரசியலுக்கு வருவார் என மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், திமுகவையும், மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியையும் கூட்டணி சேர வைத்து அந்த கூட்டணிக்கு ஆதரவு கொடுத்தார். ரஜினி ஆதரவு கொடுத்ததால் மக்கள் அந்த கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்ய அதிமுக தோற்றுப்போனது.
அதன்பின் தொடர்ந்து நடித்த பல படங்களிலும் ஜெயலலிதாவை மறைமுகமாக தாக்கி வசனம் பேசி வந்தார் ரஜினி. ஜெயலலிதாவை மனதில் வைத்தே படையப்பா படத்தில் நீலம்பரி வேடத்தை உருவாக்கினார்கள். இதை அப்படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரே ஊடகம் ஒன்றில் ஒத்துகொண்டார். பாண்டியன், அண்ணாமலை, முத்து, படையப்பா, பாபா என எல்லா படங்களிலும் அரசியல் வசனம் பேசினார் ரஜினி.
ரஜினி எப்படியும் அரசியலுக்கு வருவார் என அவரின் ரசிகர்கள் 25 வருடங்களாக காத்திருந்த நிலையில் அரசியலுக்கு வருவதாக அறிவித்துவிட்டு பின்னர் டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள். எனது உடல்நிலைக்கு அரசியல் செட் ஆகது’ என சொல்லிவிட்டார். சில நாட்களுக்கு முன்பு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் நினைவு நாளில் ரஜினி வெளியிட்டுள்ள வீடியோவில் ‘பாட்ஷா பட விழாவில் அந்த படத்தின் தாயரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன் மேடையில் இருக்கும்போதே நான் வெடிகுண்டு கலாச்சாரம் பற்றி பேசினான். இதனால், கோபமடைந்த ஜெயலதா ஆர்.எம்.வியை அமைச்சர் பதவியிலிருந்து தூக்கிவிட்டார். இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். ஜெயலலிதாவை நான் எதிர்க்க பல காரணங்கள் இருந்தாலும் இது முக்கியமான காரணம்’ என சொல்லியிருந்தார்.
இந்நிலையில், புதிய தலைமுறையின் மனதோடு உரையாடு வித் சமஸ் நிகழ்ச்சியில் பேசிய குஷ்பு ‘நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து அரசியல் பேசியிருக்கிறேன். சரியான நேரத்தில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்திருந்தால் தமிழ்நாட்டின் அரசியல் மேப் மாறியிருக்கும்’ என சொல்லியிருக்கிறார்.

