தேர்தல் நடக்குறப்போ மட்டும் சாமி கும்பிடுவாங்க…! குஷ்பு கிண்டல்…!

Photo of author

By Sakthi

தேர்தல் நடக்குறப்போ மட்டும் சாமி கும்பிடுவாங்க…! குஷ்பு கிண்டல்…!

Sakthi

இந்து பெண்களை அவமரியாதையாக பேசியதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த நடிகையுமான குஷ்பு திட்டமிட்டிருந்தார்.

ஆனால் அவர் ஆர்ப்பாட்டத்திற்கு சென்று கொண்டிருக்கும் போது, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த சூழ்நிலையில் சமீப காலத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து அரசியலில் ஆவேசமாக இறங்கிய அவர் போராட்டங்களில் ஈடுபட்டு ஊடகங்களில் தலைப்பு செய்திகளில் இடம் பெற்று வருகின்றார்.

பல வருடங்களுக்கு முன்பே தமிழகத்தில் இருக்கும் பாஜக தலைவர்களை பின்னால் தள்ளிவிட்டு குஷ்பு அக்கட்சியில் முன்னேறி வருகிறார்.
என்பது குறிப்பிடத்தக்க ஒன்று தான். ஆகவே, அவரே தமிழகத்தின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.

தேர்தல் நேரத்தில் மட்டும் சிலருக்கு கடவுள் தேவைப்படுகிறார். என்று மிகக் கடுமையான விமர்சனங்களை குஷ்பு செய்திருக்கின்றார்.

கடவுள் பெண்கள் மதிக்கப் படும் இடத்தில் தான் இருப்பார். எனவும், பெண்கள் மதிக்கப்படாத இடத்தில் கடவுள் இருப்பதற்கான வாய்ப்பே இல்லை என்று மனுதர்மத்தில் கூறியிருப்பது திருமாவளவன் அவர்களுக்கு தெரியவில்லையா? என கேள்வி எழுப்பி இருக்கிறார். நடிகை குஷ்பு.

மனு தர்மம் பற்றி குஷ்பு கூறியதாவது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஒரு புத்தகம் இது குறித்து இப்போது திருமாவளவன் எதற்காக பேசுகிறார்? எனவும் அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.