“அரியர் மாணவர்களின் அரசனே”:! தமிழக முதல்வருக்கு பிளக்ஸ் வைத்து கொண்டாடிய அரியர் மாணவர்கள்!!

Photo of author

By Pavithra

“அரியர் மாணவர்களின் அரசனே”:! தமிழக முதல்வருக்கு பிளக்ஸ் வைத்து கொண்டாடிய அரியர் மாணவர்கள்!!

Pavithra

“அரியர் மாணவர்களின் அரசனே”:! தமிழக முதல்வருக்கு பிளக்ஸ் வைத்து கொண்டாடிய அரியர் மாணவர்கள்!!

கொரோனா பரவல் காரணமாக  பள்ளி பொதுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்று பள்ளி கல்வி துறையால் அறிவிக்கப்பட்டது.மேலும் கல்லூரி மாணவர்களுக்கு இறுதி ஆண்டை தவிர்த்து முதலாமாண்டு, இரண்டாமாண்டு,மூன்றாம் ஆண்டு,  மாணவர்களுக்கும்,அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி என்று உயர் கல்வித் துறையால் அறிவிக்கப்பட்டது.

ஆனால் அரியர் மாணவர்களுக்கும் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு குறித்தும் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாத தமிழக முதல்வர் நேற்று முன்தினம் அரியர் மாணவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் ஒரு அறிவிப்பினை வெளியிட்டார்.

அதில் அவர் கூறியவாறு,அரியர் பேப்பரை எழுதுவதற்கு கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணாக்கர்களுக்கு,UGC மற்றும் AICTE ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளித்து மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று தமிழக முதல்வரால் தெரிவிக்கப்பட்டது.

இதனை கொண்டாடும் விதமாக ஈரோடு கொல்லம்பாளையம் ரவுண்டானா அருகே செல்லும் ரோட்டில் அரியர்ஸ் வைத்துள்ள மாணவர்களின் சார்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டு தெரிவித்து பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டு உள்ளது.அதில், ‘அரியர்-மாணவர்களின் அரசனே, எடப்பாடியாரே, நீர் வாழ்க, வாழ்க’ என்றும், ‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு’ என்ற திருக்குறளையும் பதிவிட்டுள்ளனர். இந்த பேனர், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இது போன்று தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பல்வேறு மீம்மிஸ்களும் சமூக வலைதளங்களில் உலா வருகின்றது.