காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் கே.எல் ராகுல் விலகல்!! அவருக்கு பதில் கருண் நாயர் இடம்பிடித்தார்!!

Photo of author

By Sakthi

காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் கே.எல் ராகுல் விலகல்!! அவருக்கு பதில் கருண் நாயர் இடம்பிடித்தார்!!

Sakthi

Updated on:

காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் கே.எல் ராகுல் விலகல்!! அவருக்கு பதில் கருண் நாயர் இடம்பிடித்தார்!!

நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்தும் உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டியில் இருந்தும் கே எல் ராகுல் விலகியுள்ளதை அடுத்து அவருக்கு பதிலாக லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியில் கருண் நாயர் அவர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்காக விளையாடி வந்த அந்த அணியின் கேப்டன் கே எல் ராகுல் அவர்கள் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

கே எல் ராகுல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடிய போது அவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டது. இந்த காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளார். இதையடுத்து கே எல் ராகுல் அவர்கள் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்தும் உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டியில் இருந்தும் விலகியுள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியில் மீதமுள்ள போட்டிகளில் விளையாடுவதற்கு கே எல் ராகுல் அவர்களுக்கு பதிலாக கருண் நாயர் சேர்க்கப்பட்டுள்ளார்.

கருண் நாயர் அவர்கள் 50 லட்சம் ரூபாய்க்கு தற்போது லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளார். மேலும் மீதமுள்ள போட்டிகளுக்கு லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் கேப்டனாக க்ருணால் பாண்டியா செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.