அடுக்கடுக்கான கேள்வியை கேட்ட திமுக. நிர்வாகி! மிகப் பெரிய அதிர்ச்சியில் முக்கிய இலாகாவின் மந்திரி!

Photo of author

By Sakthi

அமைச்சர் துரைக்கண்ணு அவர்களின் விவாகரத்தில் 800 கோடி ரூபாயை மீட்பதற்காக நடத்திய காவல்துறையினர் வேட்டை குறித்த குற்றச்சாட்டிற்கு காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் பதில் கூறாமல் அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் கூறுவது ஏன்? என்று கீழே நேரு கேள்வி எழுப்பி இருக்கின்றார்.

முன்னாள் அமைச்சரும், தலைமை கழக முதன்மை செயலாளருமான கே என் நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சர் துரைக்கண்ணு அவர்களின் மரணம் குறித்த பொய்யான தகவலை வெளியிட்டதாக எங்கள் கழகத் தலைவர் மீது சட்டரீதியாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று அறிவித்துள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், காவிரி டெல்டா மாவட்டத்தில் எதற்காக காவல்துறையினர் படைசூழ ரெய்டு நடத்தப்பட்டது என்று விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

அமைச்சருடைய இறப்பில் அதற்கான சிகிச்சையில் இருந்த சந்தேகத்தை எங்கள் கழகத்தலைவர் கேள்வியெழுப்பியிருந்தார் அவர் இறந்த பின்பு உடலை வைத்துக்கொண்டு சட்டமன்ற தேர்தல் பணிகளுக்காக கொடுக்கப்பட்ட 800 கோடி ரூபாயை மீட்டு தரவேண்டும் என்று பேரம் பேசப்பட்டது.

அப்போது நடத்தப்பட்ட காவல்துறை வேட்டை சம்பந்தமாக நக்கீரன். தினகரன் உள்பட பல பத்திரிகைகளில் ,வெளியான செய்திகளின் அடிப்படையில் எங்கள் தலைவர் சில கேள்விகளை எழுப்பியிருந்தார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்றைய தினம் வெளியிட்டிருக்கின்றார். அறிக்கையில் இந்த கோடிகள் மீட்பு சம்பந்தமாக எந்த அமைச்சர் துரிதமாக டெல்டா மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டு அந்த பணம் மீட்டு கொண்டுவரப்பட்டது என்பது சம்பந்தமாக வாயை திறக்கவில்லை. என்பது மர்மமாகவே இருக்கின்றது.

முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் இறப்புக்கு பின்பு தண்ணீர் சண்டை போட்டவர்கள் அதிமுக அமைச்சர்கள். அதில் விஜயபாஸ்கரும் ஒருவர். அதிமுக ஆட்சியில் அவர்கள் பொறுப்பில் இருக்கும் போதே ஜெயலலிதாவின் மரணம் குறித்தும், அவருக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சைகள் சம்பந்தமாகவும், ஒருவரை ஒருவர் பொதுவெளியில் சாடி கொண்டதை இந்த நாடே அறிந்திருக்கும்.

மொத்த அமைச்சரவையை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த போதும் கூட, ஜெயலலிதா அவர்களின் மரணம் சம்பந்தமாக விசாரிக்க உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது எதற்காக, என்று கேள்வி எழுப்பி இருக்கின்றார்.

மரியாதைக்குரிய ஸ்டாலின் அவர்கள் அமைச்சர் துரைக்கண்ணு விவகாரத்தில். 800 கோடி ரூபாய் மீட்க நடவடிக்கை இது சம்பந்தமாக விசாரிக்கப்படும் என்றார்.

உடனே அமைச்சர் விஜயபாஸ்கருக்கு உடல்நலம் இல்லாமல் போய்விட்டது போல.

காவல்துறை, முதல்வரின் கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றது இந்த விவகாரத்தில் அவர் தான் பதிலளிக்க வேண்டும், அதை விட்டுவிட்டு அமைச்சர் விஜயபாஸ்கர் எதற்காக முன்னாள் வந்து பதில் கூறியிருக்கின்றார். என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் கே என் நேரு.

எங்கள் தலைவர் நிச்சயமாக நாளை தமிழகத்தில் ஆட்சிக்கு வருவார், அவர் வந்ததும் அமைச்சர் துரைக்கண்ணு மரணத்திற்கு பின்பு நடைபெற்ற 800 கோடி ரூபாய் மீட்பு சம்பந்தமாக விசாரணை நடத்தப்படும். முதல் குற்றவாளி யார் என்று கண்டுபிடித்து விசாரிப்பார் குற்றவாளிகள் யாரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க இயலாது என்று தெரிவித்து இருக்கின்றார்.