உங்கள் நட்சத்திரத்திற்கு எந்த தெய்வத்தின் வழிபாடு நன்மையை தரும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!!

Photo of author

By Janani

ஜோதிட சாஸ்திரத்தில் 12 ராசிகள் வீதம் மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. ஒருவர் பிறக்கும் போது எந்த நட்சத்திரம் அந்த நேரத்தில் ஆதிக்கத்தில் உள்ளதோ அதுவே அவர்களுடைய ஜென்ம நட்சத்திரமாக கருதப்படுகிறது. ஒருவருடைய ராசி மற்றும் நட்சத்திரத்தை பொருத்து தான் அவர்களுடைய வாழ்க்கை மற்றும் எதிர்காலம் ஆகிய அனைத்துமே அடங்கும்.
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு தெய்வங்கள் உள்ளன. அதாவது 27 நட்சத்திரங்களும் 27 தெய்வங்களின் பெயர்கள் அல்லது ஆதிக்கம் என்று கருதப்படுகிறது. எனவே ஒவ்வொருவரும் அவரவர் நட்சத்திரத்திற்கு ஏற்ப உள்ள தெய்வங்களை வழிபடுவதன் மூலம் அவர்களது வாழ்க்கையில் நன்மையை தேடித் தரும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.
1. அஸ்வினி-ஸ்ரீ சரஸ்வதி தேவி
2. பரணி-ஸ்ரீ துர்கா தேவி
3. கார்த்திகை-முருகப்பெருமான்
4. ரோகினி-ஸ்ரீ கிருஷ்ணர்
5. மிருகசீரிஷம்-சிவபெருமான்
6. திருவாதிரை- சிவபெருமான்
7. புனர்பூசம்- ஸ்ரீ ராமர்
8. பூசம்-ஸ்ரீ தட்சிணாமூர்த்தி
9. ஆயில்யம்- ஆதிசேஷன்
10. மகம்-சூரிய பகவான்
11. பூரம்- ஸ்ரீ ஆண்டாள் தேவி
12. உத்திரம்- மகாலட்சுமி தேவி
13. ஹஸ்தம்-ஸ்ரீ காயத்ரி தேவி
14. சித்திரை- ஸ்ரீ சக்கரத்தாழ்வார்
15. சுவாதி- ஸ்ரீ நரசிம்மமூர்த்தி
16. விசாகம்- முருகப்பெருமான்
17. அனுஷம்- ஸ்ரீ லட்சுமி நாராயணர்
18. கேட்டை-ஸ்ரீ வராக பெருமாள்
19. மூலம்- ஸ்ரீ ஆஞ்சநேயர்
20. பூராடம்- ஸ்ரீ சம்புகேஸ்வரர்
21. உத்திராடம்- விநாயகர்
22. திருவோணம்- விஷ்ணு
23. அவிட்டம்- ஸ்ரீ ஆனந்த சயன பெருமாள்
24. சதயம்- சிவபெருமான்
25. பூரட்டாதி- ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)
26. உத்திரட்டாதி- ஈஸ்வரர்
27. ரேவதி- ஸ்ரீ அரங்கநாதன்
இந்தந்த நட்சத்திரங்களுக்கு இந்த இந்த தெய்வங்கள் என விதிக்கப்பட்டிருக்கும். எனவே அவரவர் நட்சத்திரம் வருகின்ற நாளில் இந்த தெய்வங்களை வழிபடுவதன் மூலம் அதிர்ஷ்டமும், நன்மைகளும் வந்து சேரும் என்பது ஐதீகம்.