கோடநாடு கொலை மற்றும் கொள்ளை தொடர்பான வழக்கு! ஊட்டி நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

0
205

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். அதோடு அந்த பங்களாவில் இருந்த முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டது.

. இது குறித்து சயான் உட்பட 10 பேரை கோத்தகிரி காவல் துறையினர் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை ஊட்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஆட்சி மாற்றம் நடைபெற்ற பிறகு, கொடநாடு சம்பவ வழக்கு விசாரணை மீண்டும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் வாகன விபத்தில் உயிரிழந்த கனகராஜ் செல்போன் உரையாடல் பெற கூடுதல் கால அவகாசம் கேட்கப்பட்டதால் ஒரு மாத காலம் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முன்பு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. ஒரு மாதத்தில் தனிப்படை காவல்துறையினர் யார் யாரிடம் விசாரணை செய்தார்கள்.

கனகராஜ் மற்றும் சயான் உள்ளிட்டோர் வாகன விபத்து தொடர்பான விசாரணை இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்காக குற்றம் சாட்டப்பட்ட சயான், மனோஜ், தீபு உட்பட 10 பேரும் ஆஜராகவுள்ளார்கள்.

Previous articleஒட்டு துணி  இன்றி நடுரோட்டில் ஓடிய 15 வயது சிறுமி!! காம கொடூரர்கள்  செய்த உச்சகட்டம்!
Next articleமுன்னாள் அமைச்சர்கள் செய்கையால் குழப்பமாகும் தொண்டர்கள்! அதிமுக தலைமை வெளியிட்ட அதிரடி உத்தரவு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here