டி20 கிரிக்கெட்! மும்பையை மண்ணை கவ்வ வைத்த கல்கத்தா!

Photo of author

By Sakthi

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 34 வது லீக் ஆட்டம் அபுதாபியில் நேற்றைய தினம் அபுதாபியில் நடந்த இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சந்தித்தனர். கல்கத்தாவின் வெங்கடேச ஐயர் ,திரிபாதி அதிரடி ஆட்டத்தால் மும்பை அணி தோல்வியை சந்தித்தது.

ஆரம்பத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் மோர்கன் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார் மும்பை அணியில் ரோகித் சர்மா இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குயின்டன் டி காக் மற்றும் ரோகித் சர்மா உள்ளிட்டோர் புகுந்தார்கள். இருவருமே மிக சிறப்பான ஆட்டத்தை ஆட தொடங்கினார்கள் இதன் காரணமாக, மிக வேகமாக அதிகரித்தது. ரோகித்சர்மா 30 பந்தை சந்தித்து 33 ரன்களை எடுத்து தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார்.

அந்த சமயத்தில் மும்பை அணி 9.2 ஓவரில் 78 ரன்களை சேர்த்தது அடுத்ததாக வந்த சூர்யகுமார் யாதவ் 5 ரன்னில் பெவிலியன் திரும்பிக் அவருக்கு ஏமாற்றம் அளித்தார். மறுமுனையில் மிகச் சிறப்பாக விளையாடி வந்த குயின்டன் டி காக் அரைசதம் பூர்த்தி செய்தார். இதனையடுத்து விளையாடி வந்த அவர் 42 பந்துகளை சந்தித்து 4 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்களுடன் 55 ரன்னில் இருந்த போது தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார்.

நடுவரிசை பேட்ஸ்மேன்கள் சரியாக தங்களுடைய ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. கல்கத்தா அணி சார்பாக பெர்குசன், பிரசித் உள்ளிட்டோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

அதன் பின்னர் 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த கல்கத்தா அணி தொடக்க ஆட்டக்காரர் வெங்கடேஷ் ஐயர் மற்றும் சுப்மன் கில் உள்ளிட்டோர் புகுந்தார்கள் வெங்கடேஷ் ஆகியோர் சந்தித்த முதல் பந்தை சிக்சருக்கு அனுப்பினார். இதனையடுத்து அவர் மிகவும் அதிரடியாக விளையாடினார்.

டிரென்ட் பவுல்ட் வீசிய முதல் ஓவரில் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவருமே தலா ஒரு சிக்சர் விளாசினார். இரண்டாவது ஓவர் அடம் மில்நே அவர்கள் கைக்கு சென்றது. இந்த முறை வெங்கடேச ஐயர் ஒரு சிக்சர் இரண்டு பவுண்டரி உள்ளிட்டவற்றை அடித்தார். இதன் காரணமாக, கொல்கத்தா அணிக்கு 2 ஓவர்களில் 30 ரன்கள் கிடைக்கப்பெற்றது. மூன்றாவது ஓவரை மில்னே வீசினார் இந்த ஓவரில் இருவரும் தலா ஒரு பவுண்டரி அடித்து இருந்தார்கள். இருந்தாலும் கடைசி பந்தில் சுப்மன் கில் ஆட்டமிழந்தார். மேலும் அவர் வந்தது பந்துகளை சந்தித்து 13 பெண்களை சேர்த்திருந்தார்.

இதனை தொடர்ந்து விளையாடிய வெங்கடேஷ் அய்யருடன் திரிபாதி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மிகவும் அபாரமாக தங்களுடைய ஆட்டத்தை வெளிப்படுத்தினர் கல்கத்தா அணி பவர்ப்ளேயான 6 ஆவது ஓவரில் 63 ரன்கள் குவித்து இருந்தது. 10 ஓவரில் 113 ரன்கள் சேர்த்து இருந்தது அந்த அணி. மிகச் சிறப்பாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர் 25 பந்தில் அரைசதம் கண்டார் இன்னொரு முனையில் திரிபாதி 29 பந்தில் அரைசதம் கண்டார்.

வெங்கடேஷ் ஐயர் 53 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதனை தொடர்ந்து வந்த மார்கன் 7 ரன்னில் வெளியேறினார். கடைசியில் கல்கத்தா அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து அபார வெற்றியை அடைந்தது இந்த நிலையில், இன்றைய 35வது லீக் ஆட்டத்தில் சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் சந்திக்க இருக்கின்றன.