தனுஷை சுட்டிக்காட்டி பேசிய சிவகார்த்திகேயன்.. ஒரு போதும் இந்த வேலையை நான் செய்யமாட்டேன்!!

0
262
Sivakarthikeyan pointed at Dhanush.. I will never do this job!!
Sivakarthikeyan pointed at Dhanush.. I will never do this job!!

 

சூரி அவர்களைக்  கதாநாயகனாகக் கொண்டு பி.எஸ். வினோத் அவர்களால் இயக்கப்பட்டு விரைவில் திரைக்கு வர இருக்கும் கொட்டுக்காளி படத்தின் டிரைலர் விழாவானது சென்னையில் இன்று நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட அப்படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் அவர்கள் பேசும்போது பிரபல நடிகர் ஒருவர் மறைமுகமாகத் தாக்கப்பட்டதாக நெட்டிசன்களிடையே தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

இந்நிகழ்ச்சியில் நடிகர், தயாரிப்பாளர் போன்ற பன்முகம் கொண்ட சிவகார்த்திகேயன் அவர்கள் இயக்குனர் பி.எஸ்.வினோத் ராஜ் அவர்களுடனான அறிமுகத்தைப்பற்றி கூறியுள்ளார். தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் அவர்களின் கூற்றுப்படி, கிறிஸ்டோபர் நோலன் போன்ற பெருமை வாய்ந்தவர்கள் வாங்ககூடிய விருதினை வினோத் ராஜ் அவர்கள் வாங்கியிருப்பதாகக் கூறினார். பின்பு சிவகார்த்திகேயன் அவர்கள் வினோத் -தின் ஊர்பற்றி கேட்டபோது அவர் மதுரை என்று பதிலளித்துள்ளார். தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் அவர்கள் வினோத் ராஜ் அவர்களைப் பற்றி வெளியில் தெரியப்பட வேண்டுமென விருப்பம் கொண்டாராம். இதையடுத்து வினோத் ராஜ் -இன் அடுத்த படத்தினை இவரே தயாரிக்கவும் முடிவெடுத்துள்ளார்.

இவ்வாறு இருக்கையில் இன்று அத்திரைப்பட டிரைலர் வெளியீடு விழாவில் அவர் பேசியபோது எஸ்.கே. புரொடக்சன்ஸ்  இல் இருந்து நிறைய படைப்புகள் வரும் என்றும் வினோத் ராஜ் மாதிரியான வேறு சில இயக்குனர்களின் படங்களைத் தயாரிப்பதாகக் கூறினார்.

அப்போது நான் தான் ரெடி  பண்ணேன், நான் தான் வாழ்க்கை கொடுத்தேன் என்றும் கூற மாட்டேன் என்று அவர் பேசியது நடிகர் தனுஷ் அவர்களைப் பற்றி மறைமுகாகக் கூறியிருப்பது புரிகிறது. இவ்வாறு கொட்டுக்காளி படத்தின் ட்ரைலர் விழாவில் அப்படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் அவர்களின் பேச்சு ஒரு விதமான சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

Previous articleதவெக மாநாடு இந்த இடத்தில் தான்.. வெளியாகப்போகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
Next articleஉணவு சாப்பிட்டதும் டீ குடிக்கும் பழக்கம் உள்ளவர்களா நீங்கள்? அப்போ நிச்சயம் இந்த பக்க விளைவு ஏற்படும்!!