அப்பா இறந்ததற்கு கூட போகல.. தவறா பேசுறாங்க.. வெளிப்படையாக பேசிய கோவை சரளா..!

Photo of author

By Priya

Kovai Sarala: சினிமா துறையை பொறுத்தவரை ஆண் கதாநாயகர்களுக்கு எப்போதும் முக்கியத்துவம் இருந்து வரும். ஆனால் அது தற்போது மாறி பெண்களும் சினிமா துறையில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் இருந்தாலும், பெண் காமெடி நடிகை என்று சொன்னால் மனோரமாவிற்கு அடுத்தப்படியாக நடிகை கோவை சரளா தான் நம் நினைவுக்கு வருவார்.  இவர் கமலுடன் சதி லீலாவதி போன்ற படங்களில் நடித்து தற்போது 60 வயதிற்கு மேல் ஆகியும் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் எவ்வாறு நடித்தாறோ அதே போன்று தான் இன்றளவும் இவரின் நடிப்பு மாறாமல் உள்ளது என கூறலாம்.

இவரின் நடிப்புக்கென்று தனி ரசிகர்களை உருவாக்கி கொண்டவர் தான் கோவை சரளா. இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்றிருக்கிறார். பொது வெளியில் அதிகமாக இவரை பார்க்க முடியாவிட்டாலும், இவர் தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி நடித்துக்கொண்டிருக்கிறார். இது வரை திருமணமே செய்து கொள்ளாத நடிகை கோவை சரளா சமீபத்திய பேட்டி (Kovai Sarala recent interview) ஒன்றில் தன் அப்பா இறந்த போது கூட என்னால் செல்ல முடியவில்லை. அதற்கான காரணத்தை வருத்தமாக கூறியிருப்பார்.

அவர் படப்பிடிப்பிற்காக ஊட்டி சென்றது போது அவர் அப்பா இறந்து விட்டதாகவும், அப்பா இறந்த செய்தி கேள்விப்பட்டும் நான் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. காரணம் அந்த படம் ஒரு சிறிய தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது என்றும், அதனால் தான் என்னால் செல்ல முடியவில்லை என்று கூறினார். ஆனால் பலரும் நான் பணத்திற்கு ஆசைப்பட்டு தான் செல்லவில்லை என்று அந்த சமயத்தில் என்னை விமர்சித்தார்கள் என வருத்தத்துடன் அந்த பேட்டியில் கூறியிருப்பார்.

மேலும் படிக்க: அட்டு பிளாப் ஆன “விவேகம்”! ரசிகர்களின் சாடலுக்கு மத்தியில் அஜித் செய்த செயல்!!