கோவையில் திமுகவினர் செய்யும் அட்டூழியம்! சட்டசபையில் கொந்தளித்த வானதி ஸ்ரீனிவாசன்!

0
130

பொதுவாகவே திமுக ஆட்சி வந்துவிட்டாலே வியாபாரிகள் முதற்கொண்டு தொழிலதிபர்கள் வரையில் எல்லோருக்கும் ஒரு பயம் தானாகவே வந்து தொற்றிக் கொள்ளும். அதாவது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் திமுகவின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு அன்பளிப்பு என்ற பெயரில் அடிக்கடி நிறுவன ஊழியர்களிடமும், வியாபாரிகளிடமும் தொந்தரவு செய்வது வழக்கமாக நடைபெறுவது தான்.

இதன் காரணமாகவே திமுக ஆட்சி அமைந்து விடக்கூடாது என்று பலரும் கடவுளிடம் பிரார்த்தனை வைத்திருந்தார்கள். இந்த சூழ்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக ஆட்சி அமைந்து ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அப்போதே இவர்கள் அனைவரும் இனி என்னென்னவெல்லாம் நடக்கவிருக்கிறதோ என்று புலம்பத் தொடங்கி விட்டார்கள்.

இந்தநிலையில், கோயம்புத்தூர் மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோயம்புத்தூர் தெற்கு சட்டசபை உறுப்பினருமான வானதி சீனிவாசன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது உரையாற்றிய அவர் பொள்ளாச்சியில் கயிறு சார்ந்த தொழிற்சாலைகளில் அமைச்சர்களின் பெயரை குறிப்பிட்டு ஆளும் கட்சியை சார்ந்தவர்கள் பணம் வசூலிப்பதாக வானதி ஸ்ரீனிவாசன் குற்றச்சாட்டை முன்வைத்தார் .இதுதொடர்பாக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.

கைத்தறி நெசவு தொழில்களுக்கு ஜிஎஸ்டி வரி 12 சதவீதமாக இருக்கிறது இதனை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அதிகரிக்க இருக்கின்ற சூழ்நிலையில், தமிழ்நாட்டில் கைத்தறி கூட்டுறவு சங்கங்களுக்கு விலக்கு வழங்க கோரிக்கை வைப்பதாகவும், மாநில அரசு சார்பாக முதலமைச்சர் கோரிக்கை வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் நீண்டகாலமாக சித்தாந்த அடிப்படையில் பல படுகொலைகள் உள்ளிட்டவற்றை சந்தித்து வருகிறது.

மத ரீதியாக மத தீவிரவாதத்தை வளர்க்கும் குழுக்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக கம்யூனிஸ்டு அரசு இருக்கிறது இதன் காரணமாக, படுகொலைகள் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கின்றது. தற்சமயம் நடந்திருக்கின்ற படுகொலைகள் தொடர்பான விசாரணையை சென்னையில் நடத்த வேண்டும் என்று கேரள மாநில பாஜக தலைவர் வலியுறுத்தியிருக்கிறார். அதையே நானும் வலியுறுத்தி இருக்கின்றேன்.

திட்டமிட்டு நடத்தப்படும் படுகொலைகளை மாநில அரசு விசாரிப்பதை விட்டுவிட்டு வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு முகமமை தொடங்க வேண்டும். பாஜக தலைவர்கள் மதம் மற்றும் மத ரீதியான பிரச்சனைகள் பேசுவது தவறில்லை என்றும், அதில் வல்லவராக இருப்பவர்கள் பேசட்டும் என்றும், கூறினார்.

Previous articleமறுபடியும் முதல்ல இருந்தா? லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை வளையத்திற்குள் மீண்டும் கொண்டு வரப்பட்ட முன்னாள் அமைச்சர்!
Next articleபொதுமக்களை கட்டாயப்படுத்த வேண்டிய அவசியமில்லை! அவர்களுக்கு மனசாட்சி இருக்கிறது அமைச்சர் சுப்பிரமணியன்!