கோயிலுக்கு சென்ற பெண்ணிடம் கூட்டத்தில் மர்ம நபர் காட்டிய கைவரிசை! காவல்துறையினர் தீவிர விசாரணை!

Photo of author

By Sakthi

தற்போது சில காலமாக தமிழகத்தில் திருடர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆகவே இதனை கண்காணிப்பதற்கு காவல்துறை பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இருந்தாலும் பல அப்பாவி பொதுமக்கள் அந்த திருடர்களிடம் தங்களுடைய உடைமைகளை பறிகொடுத்து தவித்து வருகிறார்கள். என்னதான் காவல்த்துறை அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் கூட அந்த திருடர்களின் கைவரிசை சற்றும் குறைந்ததாக தெரியவில்லை.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கின்ற செட்டிதெருவில் ராஜதுரை என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு நீலம்பாள் என்ற மனைவி இருக்கிறார். இவர் கோட்டாரிலிருக்கும் காளியம்மன் கோவிலுக்கு சென்றிருக்கிறார்.

அப்போது கோவிலில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததை பயன்படுத்திக்கொண்டு சாமி தரிசனம் செய்ய வந்த நீலம்பாளின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையை மர்ம நபர் திருடி சென்றிருக்கிறார்கள். அதோடு இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருவதாக சொல்லப்படுகிறது.