குலதெய்வத்தை கண்டுகொள்ளும் புதிய மந்திரம்!

Photo of author

By Sakthi

அனைவருக்கும் குலதெய்வ வழிபாடு என்றால் மிகவும் பிடித்தமான ஒன்று தான் ஆனால் அதில் ஒரு சிக்கலிருக்கிறது.

அதாவது தற்போதுள்ள இளைய தலைமுறையினர் இன்னமும் தங்களுடைய குலதெய்வம் எங்கேயிருக்கிறது என்றே தெரியாமல் இருந்து வருகிறார்கள்.

அதோடு அவரவர் வம்சத்திற்கு ஒவ்வொரு பெயரிருக்கும் தற்போதைய தலைமுறையினருக்கு அதுவும் கூட தெரிவதில்லை.வீட்டிலிருக்கும் பெரியவர்களை கேட்டு தான் அனைத்தையும் தெரிந்து கொள்வார்கள் தற்போதைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள்.

அந்த வகையில், இன்று குலதெய்வம் எங்கேயிருக்கிறது என்று தெரியாத நபர்களுக்கு அந்த குல தெய்வத்தை கண்டுபிடிக்க கூடிய சில விஷயங்களை இங்கே நாம் பார்க்கலாம்.

அதாவது, குலதெய்வ வழிபாடு தான் நம்முடைய குலத்தை காக்கும் என்கிறார்கள். குலதெய்வம் நம்முடைய வீட்டிலில்லை என்றால் நம்முடைய குடும்பத்தில் நிச்சயமாக சந்தோஷமிருக்காது. குலதெய்வ வழிபாட்டை முறையாக பின்பற்றவில்லையென்றால் குடும்பத்தில் பல சிக்கல்கள் ஏற்படும்.

பலர் குலதெய்வ கோவிலுக்கு சென்று குலதெய்வ வழிபாடு செய்வதில்லை. குடும்பத்துடனும், கோவிலுக்கு செல்வதில்லை. குறிப்பாக குலதெய்வத்தை மனதில் கூட நினைக்கவில்லை என்றால் துன்பம் வரும் நேரத்தில் மற்ற தெய்வங்களும் நமக்கு நிச்சயமாக துணை நிற்காது.

குலதெய்வம் எங்கேயிருக்கிறது என்று தெரியாதவர்கள் குலதெய்வத்தை நாள்தோறும் மனதார நினைத்து வீட்டில் தீபமேற்றி வழிபாடு செய்வது குடும்பத்தில் சுபிட்சத்தை உண்டாக்கும் என்கிறார்கள்.

நாள்தோறும் இரவு உறங்கச் செல்வதற்கு முன்பாக நீங்கள் இந்த வழிபாட்டு முறையை பின்பற்ற வேண்டும். சிறிய டம்ளரில் சுத்தமான குடிநீரை எடுத்துக்கொள்ளுங்கள், அதில் ஒரு துளசி இலையைப் போட்டு கொள்ளுங்கள்.

இந்த டம்ளர் தண்ணீருக்கு முன்பு நீங்கள் அமர்ந்து பின் வரும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். கிழக்கு நோக்கி அமர்ந்து இதனை செய்ய வேண்டும் என்கிறார்கள்.

ஓம் ஹ்ரீம் விசித்திர வீர்யம் ஸ்வப்னே இஷ்ட தர்ஷய நமஹா

தங்களுக்குத் தெரியாத உங்களுடைய குலதெய்வத்தை இந்த உலகம் உங்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டுமென மனதார பிரார்த்தனை செய்து கொண்டு இந்த மந்திரத்தை 27 முறை உச்சரித்து முடித்த பிறகு டம்ளரிலிருக்கும் தண்ணீரை குடித்து விட வேண்டும்.

அதேபோல தொடர்ந்து 48 நாட்கள் இரவு நேரத்தில் மேற்சொன்னபடி இந்த வழிபாட்டு முறையை பின்பற்ற வேண்டும்.

நிச்சயமாக மந்திரத்தை நம்பிக்கையுடன் உச்சரிக்க வேண்டும். இப்படி செய்தால் தெரியாத உங்களுடைய குலதெய்வம் தொடர்பான விவரம் உங்களுக்கு தெரியவரும் என்பது ஐதீகம்.

48 நாட்களில் குலதெய்வம் தொடர்பான தகவல் கிடைக்கவில்லையென்றாலும் கூட பரிகாரத்தை விட்டுவிட வேண்டாம்.

90 நாட்கள் தொடர்ந்து இப்படி வழிபாட்டை முன்னெடுக்கவேண்டும் அப்போது நிச்சயமாக உங்களுடைய குலதெய்வத்தை நீங்கள் கண்டு கொள்ளலாம்.