பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து குமரன் விலகல்! ரசிகர்கள் அதிர்ச்சி!

0
205

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. அதனால் இந்த சீரியல் இந்தியாவின் எட்டு மொழிகளில் தயார் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகின்றது. இலங்கையிலும் இந்த சீரியல் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

தமிழ்மொழியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஸ்டாலின் , சுஜிதா, ஹேமா, வெங்கட், ராஜ்குமார், குமரன் தங்கராஜன், சரவணன், காவியா என்று பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர் .அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசம் மற்றும் கூட்டு குடும்பத்தில் இருக்கும் சந்தோஷம் போன்றவை தான் இந்த சீரியலின் கதை கரு.

இந்த தொடரில் பல கதாபாத்திரங்கள் இருந்தாலும் கூட இல்லை கதிர் என்று நடித்து வந்த குமரன் மற்றும் சித்ரா ஜோடிக்கு தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. ஆனாலும் சித்ரா இறப்பிற்குப்பின் பின்னர் இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமே சோகத்தில் மூழ்கி இருக்கிறது என்று சொல்லவேண்டும். தற்சமயம் பாரதிகண்ணம்மா தொடரில் அறிவுமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவியா முல்லையாக நடித்து வருகின்றார்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களாக குமரன் நடித்து வரும் காதிர் கதாபாத்திரத்தை அந்த தொடரில் பார்க்கவே இயலவில்லை என்று சொல்லப்படுகிறது. அவர் எங்கேயோ வெளியூருக்கு சென்று சென்றிருப்பதாக கதையில் சொல்லப்படுகிறது. ஆனாலும் குமரன் இந்த தொடரில் இருந்து விலகிவிட்டார் என்ற தகவலும் வெளியாகி இருக்கின்றன. அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்திருப்பதால் இனி அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் அடிக்க மாட்டார் அவருக்கு பதிலாக குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலமாக புகழ்பெற்ற அஸ்வின் நடக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

தற்சமயம் இதுவரை பரப்பப்பட்ட வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, நடிகர் குமரன் நேற்றையதினம் பாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்பில் பங்கேற்று இருக்கிறார் இதுகுறித்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவு செய்திருக்கிறார். அதோடு தன்னுடைய கதாபாத்திரத்தை குறிப்பிட்டு இன்ஸ்டாகிராமில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இருந்து குமரன் விலக வில்லை என்பது உறுதியாகியிருக்கிறது.

Previous articleசசிகலா நம்பும் அந்த எளிய நபர்!
Next articleபிரபல நடிகர் வீட்டில் அடுத்தடுத்து மரணம்! நடந்தது என்ன?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here