கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சட்டவிரோதமாக மண்ணை வெட்டி எடுத்து விற்பனை

0
183

தஞ்சாவூர் மாவட்டத்தில் நீர்நிலையை தூர் வாருவதாக கூறி கோவிலுக்கு சொந்தமான நீர் பிடிப்பு பகுதியில் சட்டவிரோதமாக மண்ணை வெட்டி விற்பனை செய்து வருவது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து கோவில் நிர்வாகம் மற்றும் அப்பகுதி பொது மக்களால் தற்காலிகமாக மண் அள்ளுவதை தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஒன்றியம்
கோவிலாச்சேரி எலந்தையாப்பார் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் சட்ட விரோதமாக மண்ணை எடுத்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. இதை செய்வது கோவிலாச்சேரி ஊ.ம.தலைவர்ரும்,கும்பகோணம் கிழக்கு ஒன்றிய துணை செயலாளருமான
ஜெ.சுதாகர் என்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து
கோவிலாச்சேரி அருள்மிகு எலந்தையப்பார் கோவிலை குலதெய்வமாக கொண்ட நடவகரை கோவில் பங்காளிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளுடன் வந்து கோவிலாச்சேரி ஊ.ம.தலைவர் ஜெ.சுதாகரிடம் விசாரணை நடத்தினர். இதனையடுத்து அவருடன்  சிறிது நேரம் வாக்குவாதம் நடத்தி சட்டவிரோதமாக மண் அள்ளுவதை தற்காலிகமாக தடுத்து திறுத்தப்பட்டது.

https://youtu.be/yKCbGNU86KQ

மேலும் நிரந்தரமாக மண் அள்ளுவதை தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

Previous articleபத்தர்கள் இல்லாமல் சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெற்ற ஆனி திருமஞ்சன திருவிழா
Next articleகொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உதவும் நோயெதிர்ப்பு உயிரணுக்கள் கண்டுபிடிப்பு