பிரபல நடிகையும்,காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான நடிகை குஷ்பு இன்று பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார். இவருடன் தமிழகத்தை சேர்ந்த மேலும் இருவர் பாஜகவில் தங்களை இணைத்து கொண்டுள்ளனர். அதில் ஒருவர் பிரபல தொலைக்காட்சியில் நெறியாளராக பணி புரிந்தவரான மதன் ரவிச்சந்திரன் ஆவார்.
நடுநிலையான கேள்விகளை கேட்கிறேன் பேர் வழியில் இவர் திமுகவை ஊடகங்கள் வழியாக உண்டு இல்லையென ஆக்கி வந்தார்.தொடர்ந்து திமுகவையும்,பெரியாரிய கொள்கைவாதிகளையும் டார்கெட் செய்து விமர்சித்து வந்துள்ளார். இந்நிலையில் அரசியல் அழுத்தம் காரணமாக அவர் தான் பணி புரிந்து வந்த தொலைக்காட்சி சேனலிலிருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இதனையடுத்து அவர் பாஜக ஆதரவாளர்கள் சிலருடன் இணைந்து யூ டியூப் சேனலை ஆரம்பித்து நடத்தி வந்தார். அங்கும் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட அதிலிருந்தும் வெளியேறினார். உதயநிதி ஸ்டாலின் மற்றும் மான்கறி விவகாரத்தில் வழக்கில் சிக்கிய இவர் அடுத்து சில காலம் சமூக ஊடகங்களில் எதையும் பதிவிடாமல் அமைதி காத்து வந்தார்.
ஆரம்பத்திலிருந்தே பாஜக ஆதரவாளராக அறியப்பட்ட இவர் தற்போது பாஜகவில் இணைந்துள்ளது தமிழக அரசியலில் இணைந்துள்ளது எந்தவொரு பிரதிபலிப்பையும் ஏற்படுத்தபோவதில்லை. இதற்கு முன் ஊடகவியலார் பெயரில் திமுகவை விமர்சனம் செய்து வந்ததை தற்போது பாஜக சார்பாக வெளிப்படையாக செய்ய போகிறார்.
Shri Madan Ravichandran and Shri Saravanan Kumaran from Tamil Nadu #JoinBJP in presence of senior BJP leaders at BJP headquarters in New Delhi. pic.twitter.com/O16YNlENkz
— BJP (@BJP4India) October 12, 2020
அதேபோல தமிழகத்தை சேர்ந்த முன்னாள் IRS அதிகாரி சரவணகுமார் என்பவரும் இவர்களுடன் பாஜகவில் இணைந்துள்ளார்.ஏற்கனவே அண்ணாமலை IPS பாஜகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.