குஷ்புவின் கருத்தால் அதிர்ச்சிக்குள்ளான ஆளும் தரப்பு! கூட்டணியில் விரிசலா!

0
197

தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்ற நிலையில், திமுக அதிமுக போன்ற கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார்கள்.

அதிமுக பாஜக கூட்டணி உறுதியாக இருக்கும் என்று தெரிந்த நிலையில், திமுக காங்கிரஸ் கூட்டணி இணைந்து சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் என்று தெரிகின்றது.

பாஜக அதிமுக கூட்டணி அமைக்கும் என தமிழக பாஜகவின் தலைவர் முருகன் உறுதியாக தெரிவித்து இருக்கின்ற நிலையில் ஒரு சில மாறுபட்ட கருத்துக்களும் இரு கட்சிகளுக்கு இடையே இருந்து வருகின்றது அதேநேரம் பாஜகவால் தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க இயலாது என அதிமுகவின் மூத்த நிர்வாகி பொன்னையன் தெரிவித்திருப்பது கட்சிக்குள் ஒரு சலசலப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

இந்தநிலையில் நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பு தமிழகத்தில் எதிர் வரும் சட்டசபை தேர்தலில் நிச்சயமாக கூட்டணிகள் மாறும் காங்கிரஸ் தனித்து விடப்பட்டால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை என்று தெரிவித்திருக்கின்றார்.

அந்தக் கட்சி சுமையாகவே இருக்கின்றது, பொருத்திருந்து பார்க்கலாம் என்று பதிவிட்டு இருக்கின்றார். சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் ஐக்கியமான குஷ்பு காங்கிரஸ் ஒரு மன வளர்ச்சி இல்லாத கட்சி என கூறி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றார். அதன் பின்னர் இந்த கருத்துக்கு மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அவர் மன்னிப்பு கூறியிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

Previous articleவயிற்றில் நீர் கட்டி என்று சொன்ன இளம்பெண்! கடைசியில் ஆண் குழந்தை பிறந்த விவகாரம்!
Next articleதமிழகத்தின் சிற்பி என ஸ்டாலின் புகழ்ந்த! அந்த நபர் யார் தெரியுமா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here