அதிரடி முடிவை அறிவித்த எல் முருகன்…! கலக்கத்தில் பாஜகவினர்…!

Photo of author

By Sakthi

அதிரடி முடிவை அறிவித்த எல் முருகன்…! கலக்கத்தில் பாஜகவினர்…!

Sakthi

தமிழகத்தில் அடுத்து வரும் 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கின்றது அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி இருக்கிறது தற்போதைய நிலையில் பாரதிய ஜனதா கட்சி அதிக இடங்களில் வெற்றி அடையும் என்று அந்த கட்சியினர் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக அதிமுகவிடம் சுமார் அறுபது தொகுதிகளை நாங்கள் கேட்ப்போம் என்று பாரதிய ஜனதா கட்சியினர் தெரிவித்து வருகிறார்கள் ஆனாலும் நிறைய இடங்களை அதிமுக தருமா என்பது கேள்விக்குறியான ஒன்றுதான்.

இதற்கிடையில் பாரதிய ஜனதா கட்சியினர் போட்டியிடும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டதாகவும் வேட்பாளர்களின் பட்டியல் போட தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது இந்த நிலையில் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்திருக்கிறார்.

வெற்றிவேல் யாத்திரைக்கு காப்பு கட்டும் நிகழ்வு நடந்தது அதில் கலந்து கொண்ட அவர் தொண்டர்களுக்கு காப்பு கட்டினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த அவர் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று தெரிவித்ததாக தெரிகிறது.