கூட்டணியில் இருக்கும் அதிமுக மற்றும் பாஜக இரு கட்சிகளுக்கு இடையில் மோதல் போக்கு நீடித்து வருவதாக தெரிவித்துள்ள நிலையில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் முருகன் அதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.
பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது எங்களுக்குள் எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது.
வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் திமுக இரட்டைவேடம் போட்டுக் கொண்டிருக்கின்றது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளை தூண்டி விட்டு ஒரு சிலர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
அவர் சமீபத்தில் முதல்வர் வேட்பாளரை பாஜக தான் முடிவு செய்யும் என்று அவர் தெரிவித்திருந்தது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்த ஆளும் தரப்பினர் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், பாஜக தனித்து போட்டியிட வேண்டிய நிலைமை ஏற்படும் அவருடைய இந்தக் கருத்து ஏற்கத் தகுந்தது இல்லை. மத்திய அமைச்சர்களே எடப்பாடி பழனிச்சாமியை ஏற்றுக் கொண்ட பின்பு முருகன் இவ்வாறு தெரிவிப்பது ஒரு விஷயமே இல்லை. .என்றெல்லாம் அதிமுக தரப்பில் விமர்சனம் செய்யப்பட்டது. இதற்கு பாஜகவின் மாநில தலைவர் முருகன் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.
இதுபோன்று அதிமுக மற்றும் பாஜகவினர் இடையில் மோதல் போக்கு நீடித்து வரும் காரணத்தால், தேர்தல் கூட்டணியில் விரிசல் உண்டாகுமோ என்ற சந்தேகம் இருந்து வந்தது இதுபோன்ற சூழ்நிலையில், அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் எந்த ஒரு சலசலப்பும் கிடையாது என்று முருகன் தெரிவித்து இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.