பெண்களே உங்க வங்கி கணக்கிற்கு 1 ரூபாய் வந்துள்ளதா!!! அப்போ உங்களுக்கு மாசம் 1000 ருபாய் கன்பார்ம்!!!
மகளிர் உரிமை தொகை பெறுவதற்கு விண்ணபித்துள்ள பெண்களின் வங்கி கணக்கிற்கு 1 ரூபாய் வந்திருந்தால் அவர்கள் மகளிர் உரிமைத் தொகையான 1000 ரூபாய் உதவித் தொகை பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் அறிமுகப்படுத்தியுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வருகிற செப்டம்பர் மாதம் 15ம் நாள் தொடங்கப்படவுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மாதம் 1000 ரூபாய் பெறுவதற்கு 1.63 கோடி பெண்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்களில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் மாதம் 1000 ரூபாய் பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வு செய்யப்படாமல் நிரகாரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்கும் வகையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சென்று அங்கு ஆர்.டி.ஓ அலுவலகரிடம் முறையிட்டு மீண்டும் தீர்வு காணலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து விண்ணப்பதாரர்களை நேரில் சென்று ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில் தற்பொழுது வங்கிக் கணக்குகளை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி சென்னை மாவட்டம் உள்பட பல மாவட்டங்களில் இருந்து 1000 ரூபாய் பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்ட பெண்களின் வங்கி கணக்குகளுக்கு கடந்த இரண்டு நாட்களாக வங்கி கணக்குகளை சரிபார்க்கும் வாதமாக ஒரு ரூபாய் அனுப்பப்பட்டு வருகின்றது என்று தகவல் கிடைத்துள்ளது. ஒரு ரூபாய் அனுப்பியவுடன் விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி மூலமாக தகவல் தெரிவிக்கப்படுகிறது என்றும் தகவல் கிடைத்துள்ளது.
தவறான விண்ணப்பதாரர்களின் வங்கி கணக்குகளுக்கு 1000 ருபாய் சென்று விடக் கூடாது என்ற எண்ணத்தில் இந்த பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது என்று தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. அது மட்டுமில்லாமல் கைபேசி வழியாக விண்ணப்பதாரர்களை தெடர்பு கொண்டு அவங்கி கணக்குகளின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.