பெண்களே இனி நீங்கள் இதை செய்தால் போதும்! உடனே உங்கள் உதவிக்கு வருவார்கள் இவர்கள் !
தற்போது உள்ள கால கட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து கொண்டே உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெண் பிள்ளைகளை வீட்டை விட்டு வெளியே அனுப்பினால் ஆபத்து என்று, பெண்களை வேலைக்கும் படிக்கவும் அனுப்பாமல் வீட்டிலயே வைத்திருந்தனர்.
ஆனால் தற்போது காலங்கள் மாறிவிட்டது, வெளியே செல்லும் பெண்களை விட வீட்டில் இருந்தே கொடுமைகளை அனுபவிக்கும் பெண்கள் அதிகம். ஆம், சொந்த அண்ணனாலும் தந்தையாலும் பலாத்காரம் செய்யப்படும் பெண்களும் அதிகம்.
இதனை கருத்தில் கொண்டு, பெண்கள் மற்றும் குழந்தைகள் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி மையம் (Women Child Help desk) தமிழ்நாடு காவல்துறையால் தொடங்கப்பட்டது. அதன்படி பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான புகார், வழக்குகளுக்கு 100, 1098 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு விபரங்களை கூறினால் போதும்.
உடனடியாக பெண் போலீஸார் உங்கள் வீடு தேடி வந்து விசாரித்து உதவி செய்வார்கள். இதற்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள பெண் போலீஸாருக்கு இருசக்கர வாகனம் மற்றும் மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை தமிழ்நாடு முழுவதும் சுமார் 400 ஸ்கூட்டர்கள் போலீஸாருக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கோவை பெண் போலீஸாருக்கு இருசக்கர வாகனம் மற்றும் மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி பி.ஆர்.எஸ் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில், கோவை போலீஸ் எஸ்.பி செல்வநாகரத்தினம் கலந்துகொண்டு பெண் போலீஸாருக்கு இருசக்கர வாகனம் மற்றும் மடிக்கணினி வழங்கினார்.
அதன்பிறகு எஸ்.பி செல்வநாகரத்தினம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், அனைத்து மகளிர் காவல்நிலையங்கள் மற்றும் பிற காவல் நிலையங்களில் பெண்கள், குழந்தைகள் சம்பந்தப்பட்ட புகார்களுக்கான பிரத்யேக உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது என்றும்,அதுதொடர்பான புகார்களை விசாரிக்க கோவையில் 18 காவல்நிலையங்களில் உள்ள பெண் போலீஸாருக்கு, காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து இருசக்கர வாகனம், மடிக்கணினி வழங்கியுள்ளோம்.
இனி, பெண்கள், குழந்தைகளை காவல்நிலையம் வரவைக்காமல், அவர்களின் இடங்களுக்கு நேரடியாகச் சென்று புகார், வாக்குமூலங்களைப் பெற்று தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள். நேரடியாகச் சென்று விசாரிப்பதால் விரைவில் தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம். சில நல்ல உள்ளங்களின் உதவியோடு அவர்களுக்கு ஹெல்மெட்டும் வழங்கியுள்ளோம் என்றார்.