ட்ரெயிலர் வெளியீட்டு விழாவா  இல்ல மாநாடா? புஷ்பா-2 பட விழாவில் லட்சக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்பு!!

Photo of author

By Sakthi

ட்ரெயிலர் வெளியீட்டு விழாவா  இல்ல மாநாடா? புஷ்பா-2 பட விழாவில் லட்சக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்பு!!

Sakthi

Lakhs of fans attended the trailer launch of "Pushpaa-2: The Rise"

Pushpa-2:The Rise:”புஷ்பா-2:தி ரைஸ்”ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பல லட்ச ரசிகர்கள்.

நடிகர் அல்லு அர்ஜுன்  நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளியான படம் தான் புஷ்பா-1:தி ரைஸ்  இப்படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கி இருந்தார். தெலுங்கு, கன்னடம் ,தமிழ்  இந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு  திரையிடப்பட்டது. இப் படத்தில் கதாநாயகனாக அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் என திரைப் பிரபலங்கள் நடித்து இருப்பார்கள்.

இப்படத்தில் நடிகை  சமந்தா  நடனமாடிய பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனது. இதனால் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க உள்ளதாக  படக்குழு அறிவித்தது. புஷ்பா-2 படம் 2024 ஆம் ஆண்டு  டிசம்பர்-5ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படம் 5 மொழிகளில் வெளியாக உள்ளது.

இப் படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழா நேற்று நவம்பர்-17 மாலை 6 மணியளவில் பீகார் மாநிலம் பாட்னாவில்  காந்தி மைதானம் என்ற இடத்தில் நடைபெற்றது.  இதில் புஷ்பா-2:தி ரைஸ்   படக் குழுவினர் பங்கு பெற்றார்கள். இந்த விழாவில் கலந்து கொள்ள பல லட்ச கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டார்கள்.

இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  மேலும் ரசிகர்கள் பலர்  ஆபத்தை உணராமல் விழாவில் வைக்கப்பட்டு இருந்த மின் விளக்கு கோபுரத்தின் மீது ஏறி அமர்ந்து இருக்கும் காட்சி விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

மேலும் இப்படத்தில்  நடிகை  ஸ்ரீலீலா கிஸிக் என்ற பாடலுக்கு நடனமாடி உள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது.