வசமாக சிக்கிய அப்பாவு! கிடுக்குப்பிடி போட்ட உயர் நீதிமன்றம்!

Photo of author

By Sakthi

திருநெல்வேலி மாவட்டம் தாராபுரம் சட்டசபை தொகுதியிலிருந்து சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது தமிழக சபாநாயகராக இருப்பவர்தான் அப்பாவு.

தற்போது சபாநாயகராக இருக்கின்ற நிலையில், தொகுதியில் இருக்கின்ற பெருங்குடி கிராமத்தில் வழக்கறிஞர் தாமோதரன் என்பவர் தனக்கு சொந்தமான 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 10 சென்ட் நிலத்தை பிச்சையம்மாள், சுப்பையா, சந்தானம், உள்ளிட்டோர் மூலமாக அபகரித்ததாக தற்போதைய சபாநாயகர் அவர்களுக்கு எதிராக மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் வழங்கியிருக்கிறார்.

இந்த புகாரின் மீது வழக்குப்பதிவு செய்த காரணத்தால், திருநெல்வேலி நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அப்பாவு, பிச்சையம்மாள், சுப்பையா, சந்தானம், உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்றும், சொல்லப்படுகிறது.

இந்த வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்று தெரிவித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட தாமோதரன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதற்கிடையில் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று தெரிவித்து சபாநாயகர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். விசாரணைக்கு பின்னர் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இருக்கின்ற சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது, அப்போது மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார் வழக்கின் நிலை தொடர்பாக 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.