நிலச்சரிவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு:? மேலும் ஐந்து சடலங்கள் மீட்பு?

Photo of author

By Pavithra

கடந்த வெள்ளிக்கிழமையன்று கேரளாவில் மூணாரில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக 20 குடும்பங்களைச் சார்ந்த 78 பேர் மண்ணில் புதைந்தனர்.கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து மீட்பு பணி நடைபெற்று வருகின்றது.மழையின் காரணமாக மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டதன் காரணமாக இன்றுவரை மீட்பு பணி நடைபெற்று வருகின்றது.கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை விவரங்கள்

வெள்ளிக்கிழமை அன்று நடத்தப்பட்ட மீட்புப்பணியில் 12 பேர் காயங்களுடனும்,17 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டனர். சனிக்கிழமையன்று தொடர்ந்து நடத்தப்பட்ட மீட்பு பணியில் மேலும் 10 பேர்களின் உடல் சடலமாக மீட்கப்பட்டு பலி எண்ணிக்கை 27 ஆக உயர்ந்தது.இதன் பிறகு நேற்று ஞாயிற்றுக்கிழமையன்றும் 15 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு பலி எண்ணிக்கை 42ஆக உயர்ந்தது.

தற்போது வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையின்படி 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது.