லங்கா பிரீமியர் லீக் 2023… சேம்பியன் பட்டத்தை கைப்பற்றிய பி-லவ் கேண்டி அணி!!

Photo of author

By Sakthi

 

லங்கா பிரீமியர் லீக் 2023… சேம்பியன் பட்டத்தை கைப்பற்றிய பி-லவ் கேண்டி அணி…

 

இலங்கையில் நடைபெற்று வந்த லங்கா பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தம்புள்ளா அவுரா அணியை வீழ்த்தி பி-லவ் கேண்டி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

 

கடந்த சில நாட்களாக இலங்கையில் உள்ளூர் கிரிக்கெட் தொடரான லங்கா பிரீமியர் லீக் தொடர் நடைபெற்று வந்தது. இந்த தொடரில் இறுதிப் போட்டிக்கு அஞ்ஜிலோ மேத்யூஸ் தலைமையிலான பி-லவ் கேண்டி அணியும், குசால் மென்டிஸ் தலைமையிலான தம்புள்ளா அவுரா அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

 

நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற தம்புள்ளா அவுரா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த தம்புள்ளா அவுரா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டிசில்வா 40 ரன்களும், சமரவிக்ரமா 36 ரன்களும், குசல் மெண்டிஸ் 22 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பந்துவீச்சில் பிலவ் கேண்டி அணியில் சி டிசில்வா 2வ விக்கெட்டுகளையும், முகமது ஹஸ்நயின், என் பிரதீப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

 

இதையடுத்து 148 ரன்கள் வெற்றி இலக்காக பி-லவ் கேண்டி அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. 148 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய பி-லவ் கேண்டி அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

 

பி-லவ் கேண்டி அணியில் காமிந்து மெண்டிஸ் 44 ரன்களும், ஹாரிஸ் 26 ரன்களும், சண்டிமால் 24 ரன்களும் ஆசிப் அலி 19 ரன்களும் எடுத்தனர். பந்துவீச்சில் தம்புள்ளா அவுரா அணியில் நூர் அஹ்மது மூன்று விக்கெட்டுகளையும், பினுரா பெர்ணான்டோ இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

 

5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பி-லவ் கேண்டி அணி 2023ம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் தொடரின் கோப்பையை கைப்பற்றி சேம்பியன்ஸ் மகுடம் சூடியது. நேற்று(ஆகஸ்ட்20) நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருதை அஞ்ஜிலோ மேத்யூஸ் வென்றார். தொடர்நாயகன் விருது, அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியதற்கான விருது, அதிக சிக்சர் அடித்ததற்கான விருது, அதிக ரன்கள் அடித்ததற்கான விருது ஆகியவை வனிந்து ஹசரங்காவிற்கு வழங்கப்பட்டது.