State

பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி!

பொறியியல் படிப்புகளுக்கான மாணவர்கள் கலந்தாய்வு இணையவழி சேர்க்கை கடந்த ஜூலை 15-ம் தேதி தொடங்கப்பட்டது.இணைய வழியிலேயே மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரிகளை தேர்வு செய்யும் வகையில் இந்த கலந்தாய்வு நடத்தப்பட்டது.

இந்த இணைய வழி கலந்தாய்வில் தற்போது வரை 1.53 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். அதில் 1.23 லட்சம் மாணவர்கள் தங்களுக்கான விண்ணப்பக் கட்டணங்கள் செலுத்தி உள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழியில் விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் நாளைக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இதனையடுத்து விண்ணப்பித்த மாணவர்களுக்கான சமவாய்ப்பு எண்கள் வருகின்ற ஆகஸ்ட் 21ம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment