ஏ.ஆர்.ரஹ்மானை பெருமைபடுத்த இயக்குனர் செய்த காரியம்

Photo of author

By Janani

ஏ.ஆர்.ரஹ்மானை பெருமைபடுத்த இயக்குனர் செய்த காரியம்

Janani

Updated on:

AR Rahman

ஏ.ஆர்.ரஹ்மானை பெருமைபடுத்த இயக்குனர் செய்த காரியம்

தனுஷ் நடித்த அட்ரங்கி ரே ஹிந்தி படம் டிசம்பர் 24 ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியானது.

ஆனந்த் L ராய் இயக்கிய இந்த படம் ரசிகர்கள் மற்றும் விமர்சர்களால் கலவையான விமர்சனமே பெற்றது.

முக்கோண கதைகளத்தில் அமைந்த இந்த படத்தில் திரைக்கதை சிறப்பாக அமைந்திருந்தது.

படத்தின் முதல் பாதி வேகமாகவும் இரண்டாம் பாதி சற்று தோய்வுடனே செல்கிறது.

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் பின்னணி இசை படத்திற்கு மிக பெரிய பலமாக அமைந்திருந்தது.

ரஹ்மானின் பின்னணி இசை படத்திற்கு எவ்ளோ பெரிய பலமாக அமைந்தது என்பதற்கு படத்தின் முடிவில் A Film by A.R. ரஹ்மான் என்று இயக்குனர் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.

படத்தின் எடிட்டிங் வேலைகள் முடிந்ததும், இயக்குனரை தொடர்பு கொண்டு “A Film by Anand L Rai” என்று போட்டுவிடலாமா என்று கேட்டார். எடிட்டருக்கு பதில் அளித்த இயக்குனர் படத்தின் முடிவில் A Film by A.R. ரஹ்மான் போடுங்கள் என்று சொன்னாராம்.

இந்நிலையில் ட்விட்டரில் இதை குறிப்பிட்டு ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த ரஹ்மான், இசைக்கும் இசைக்கு முக்கியத்துவம் மற்றும் எங்கள் உழைப்பை மதிக்கும் இது போன்ற இயக்குனர்கள் அதிகம் வரவேண்டும் என்று பதில் அளித்துள்ளது பலரின் கவனத்தை பெற்றுள்ளது.