பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் சுற்று! ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா !!

0
110
#image_title
பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் சுற்று! ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா !!
நேற்று(அக்டோபர்27) நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் பாகிஸ்தான் அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி திரில் வெற்றி பெற்றது.
உலகக் கோப்பை தொடரின் 26வது லீக் சுற்றில் தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. இந்த போட்டி சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 46.4 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 270 ரன்கள் சேர்த்தது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக சவுத் சகீல் அரைசதம் அடித்து 52 ரன்களும், பாபர் அம் அரைசதம் அடித்து 50 ரன்களும் சேர்த்தனர். சதாம் கான் 43 ரன்கள் சேர்த்தார்.
தென்னாப்பிரிக்க அணியில் சிறப்பாக பந்துவீசி சம்சி சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சென் 3 விக்கெட்டுகளையும், கெரால்ட் கோட்சே 2 விக்கேட்டுகளையும், கங்குலி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதனால் தென்னாப்பிரிக்க அணிக்கு 271 ரன்கள் இலகக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் தொடங்கியது ஆட்டக்காரர் டிகாக் 24 ரன்களும், தெம்பா பவுமா 28 ரன்களும் ராஸி வான் டெர் டுசென் 21 ரன்களும் சேர்த்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய எய்டன் மார்க்ரம் பொறுமையாக விளையாடி ரன்களை சேர்க்கத் தொடங்கினார்.
ஒரு புறம் எய்டன் மார்க்கம் ரன்களை சேர்க்க மறுபுறம் தென்னாப்பிரிக்க அணியின் விக்கெட்டுகள் ஒவ்வொன்றாக விழத் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய எய்டன் மார்க்ரம் அரைசதம் அடித்து 90 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். ஒரு கட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி ஒன்பது விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் சென்றது.
47 வது ஓவரின் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்கள் சேர்த்திருந்தது. தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெறுவதற்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. பாகிஸ்தான் வெற்றி பெற ஒரு விக்கெட் மட்டும் தேவை என்ற நிலையில் 48வது ஓவரை பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர் முகமது நவாஸ் வீசினார்.
அப்பொழுது ஸ்டிரைக்கில் இருந்த சம்சி ஒரு ரன் எடுத்தார். பின்னர் வந்த கேசவ் மஹராஜ் தேவையான நான்கு ரன்களை பவுண்டரி அடித்து எடுத்தார். இதனால் தென்னாப்பிரிக்க அணி 47.2 ஓவர்களில் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தென்னாப்பிரிக்க அணி உலகக் கோப்பை தொடரின் 5வது வெற்றியை பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
பாகிஸ்தான் அணியில் சிறப்பாக பந்துவீசிய ஷாகின் ஷா அப்ரிடி 3 விக்கெட்டுகளையும், ஹரிஸ் ராப், மொஹம்மது வாசிம் ஜூனியர், உஷ்மா மிர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்த தோல்வியின் மூலம் பாகிஸ்தான் அணி தனது 4வது தோல்வியை பெற்று அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை இழக்கும் நிலையில் உள்ளது.
Previous articleநுரையீரலை ஆரோக்கியமாக வைக்கும் டாப் 10 உணவுகள்!!
Next articleநேற்று தொடங்கிய மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடர்! தாய்லாந்து அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!!