பதவியை விட்டுருங்க.. மாநில தலைவரிடம் பாஜக தலைமை பேச்சு!! குஷியில் அண்ணாமலை!!

0
24
Leave the post.. BJP leader's speech to the state president!! Annamalai in Kushi!!
Leave the post.. BJP leader's speech to the state president!! Annamalai in Kushi!!

BJP: 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாத காலமே இருக்கும் நிலையில், தமிழக தேர்தல் களமே பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் நடைபெறும் தேர்தலுக்காக தேசிய கட்சிகளான பாஜகவும், காங்கிரஸும் மோதிக் கொண்டிருக்கிறது. பீகாரில் மாபெரும் வெற்றி பெற்ற பாஜக அடுத்ததாக தமிழக தேர்தலை நோக்கி திரும்பியுள்ளது. பாஜக எவ்வளவு முயற்சித்தும் அதனால் தமிழகத்தில் காலூன்ற முடியவில்லை. அதற்கு பாஜகவின் கொள்கை தான் காரணம் என விமர்சிக்கப்படுகிறது.

இவ்வாறு தமிழகத்தில் பின் தங்கி இருக்கும் பாஜக, அண்ணாமலையின் வருகைக்கு பிறகே சற்று விரிவடைந்தது. அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக பொறுப்பெற்றதிலிருந்தே தமிழக இளைஞர்கள் பலரும் அவரை பின் தொடர ஆரம்பித்தனர். இவரின் வருகைக்கு பின் தான் தமிழகத்தில் பாஜக மீதான ஊடகங்களின் வெளிச்சம் அதிகமானது என்றே கூறலாம். இதன் பின்னர் இபிஎஸ்யின் நிபந்தனையால் தனது பதவியை விட்டு விலகிய அண்ணாமலைக்கு பதிலாக புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றார்.

இவரால் அண்ணாமலையின் இடத்தை பிடிக்க முடியவில்லை. தமிழகத்தில் அண்ணாமலையால் பாஜகவிற்கு கூடிய வாக்கு வங்கி, நயினாரால் மீண்டும் பழைய நிலைக்கே வந்தது. இதன் காரணமாக அண்ணாமலை மீண்டும், மாநில தலைவராக அமர்த்தப்படலாம் என்று பாஜகவை சேர்ந்தவர்கள் கூறி வந்தனர். இது குறித்து நயினாரிடம் கேட்ட போது அதனை உறுதிப்படுத்தும் விதமாக, அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று கூறினார்.

இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக வலுப்பெற வேண்டுமென்றால், அதற்கு அதிமுக கூட்டணி மட்டும் போதாது. அண்ணாமலை மீண்டும் பதவியில் அமர வேண்டுமென பாஜக தலைமை நினைக்கிறது என்ற தகவலும் பரவி வந்தது. தற்போது அதனை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு நிகழ்வு அரங்கேறி இருக்கிறது. தமிழகம் தலை நிமிர, தமிழனின் எழுச்சி பயணம் என்ற பெயரில் நயினார் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த பயணம், ஒத்தி வைக்கப்பட்டு நயினார் அவசர அவசரமாக டெல்லி சென்றுள்ளார். இவரின் இந்த திடீர் பயணம், இவரது பதவியை பறிப்பதற்கான பேச்சுவார்த்தையாக இருக்கும் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Previous articleநீங்க தவெகவுக்கு போக போறீங்களா.. செங்கோட்டையன் கப் சிப்!! திசை மாறும் அரசியல் களம்!!