அனைத்து வேலைகளையும் முடித்த லியோ படக்குழு!!! அனிருத் பகிர்ந்த புகைப்படம் இணையத்தில் வைரல்!!! 

Photo of author

By Sakthi

அனைத்து வேலைகளையும் முடித்த லியோ படக்குழு!!! அனிருத் பகிர்ந்த புகைப்படம் இணையத்தில் வைரல்!!! 

Sakthi

Updated on:

அனைத்து வேலைகளையும் முடித்த லியோ படக்குழு!!! அனிருத் பகிர்ந்த புகைப்படம் இணையத்தில் வைரல்!!!
லியோ திரைப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டதாக இசையமைப்பாளர் அனிருத் அவர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்த புகைப்படம் ஒன்று இணையத்தில் தற்பொழுது வைரலாக பரவி வருகின்றது.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ளது. லியோ திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கியுள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது.
லியோ திரைப்படத்தில் நடிகர்கள் சஞ்சய் தத், அர்ஜூன், திரிஷா, மேத்யூ தாமஸ், பிரியா ஆனந்த், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், சான்டடி, மன்சூர் அலிகான் மற்றும் பலர் நடித்துள்ளனர். படக்குழு தற்பொழுது புரொமோசன் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றது.
லியோ திரைப்படத்தின் பாடல்கள், டிரெய்லர் அனைத்தும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில் லியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பிர்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்நிலையில் லியோ திரைப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்ததாக இசையமைப்பாளர் அனிருத் சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
விக்ரம் திரைப்படம் வெளியாவதற்கு முன்னர் அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டதாக “லாக் அன்ட் லோடட்” என்று பதிவிட்டு அனிருத் அவர்களும் லோகேஷ் கனகராஜ் அவர்களும் கைகோர்த்தபடி ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். தற்பொழுது அதே போல ஒரு புகைப்படத்தை அனிருத் அவர்கள் லாக் அன்ட் லோடட் என்று பதிவிட்டு பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்பொழுது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வேராக பரவி வருகின்றது.