சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன் !! மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள்!

0
220
சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!!பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!
சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!!பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!

சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன் !! மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள்!

சிம்மராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு அனுசரணையாக இருப்பார்கள். கணவன் மனைவியிடையே ஒரு அற்புதமான புரிதல் உணர்வும் மேம்படும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் முக்கிய திட்டங்களை தீட்டுவீர்கள் அது வெற்றி அடையும்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் மேடைப்பேச்சுகளில் ஜொலிப்பார்கள். கலை துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் மனதில் தைரியத்தோடு செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் தைரியமான சூழ்நிலை அமையும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான வெண்மை நிற ஆடை அணிந்து ஸ்ரீ சரஸ்வதி தேவியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleவந்தாச்சு குளிர்காலம்! பனி கால பராமரிப்பு முறைகள்!
Next articleமெஸ்ஸியின் கனவு நனவானது! உலகக்கோப்பையை வென்று அசத்தியது அர்ஜென்டினா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here