சிம்மம் ராசி-இன்றைய ராசிபலன்!! மனதில் குழப்பங்கள் அதிகரிக்கும் நாள்!!

0
225
சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!!பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!
சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!!பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!

சிம்மம் ராசி-இன்றைய ராசிபலன்!! மனதில் குழப்பங்கள் அதிகரிக்கும் நாள்!!

சிம்மராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான்.

இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் குழப்பங்கள் அதிகரிக்கும் நாள். ராசிக்குள் சந்திர பகவான் இருப்பதால் படபடப்படும் காணப்படுவீர்கள் ஆகையால் நிதானமாக செயல்படுவது நல்லது. நிதி வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம்.

கணவன் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் விட்டுக் கொடுத்து செல்வது மிகவும் நல்லது. உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில இன்னல்கள் இடையூறுகள் வரலாம் என்பதால் கூடுமானவரை கூட்டாளிகளையும் வாடிக்கையாளர்களையும் அனுசரித்து செல்வது அவசியம். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை வேண்டும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வீண் மன குழப்பம் வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம். நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் சில பிரச்சனைகள் வந்து சேரும் என்பதால் அவர்களை அனுசரணையோடு நடந்து கொள்வது நல்லது.

அரசியல்வாதிகள் குழப்பமாக இருப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வருவதில் காலதாமதம் ஆகும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஆரஞ்சு நிற ஆடை அணிந்து மகாலட்சுமி தாயாரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleகடகம் ராசி-இன்றைய ராசிபலன்!! பொருளாதார நிலை உயரும் நாள்!!
Next articleகன்னி ராசி- இன்றைய ராசிபலன்!! விரயங்கள் அதிகரிக்கும் நாள்!!