சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!! எண்ணிய எண்ணங்கள் வண்ணங்களாக மாறும் நாள்!

Photo of author

By Selvarani

சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!! எண்ணிய எண்ணங்கள் வண்ணங்களாக மாறும் நாள்!

சிம்மராசி அவர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எண்ணிய எண்ணங்கள் வண்ணங்களாக மாறும் நாள். குடும்ப உறவு அனுகூலமாக இருக்கும் என்றாலும் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவி இடையே சிறு சிறு அபிப்பிராய வேதங்கள் எழலாம்.

வருமானம் வந்து சேரும். உத்யோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் முன்னேற்றம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தை அபிவிருத்தி செய்யும் எண்ணம் மேலோங்கும்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் எடுக்கும் காரியங்களை திறம்பட செய்து முடிப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குதூகலமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் அருமையான சூழ்நிலை உண்டாகும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் உடல் ஆரோக்கியத்திற்காக சில மாற்று மருத்துவத்தை அணுகுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் கால தாமதம் ஆகும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான நீல நிற ஆடை அணிந்து துர்க்கை அம்மன் வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.