சிம்மம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கணவன் மனைவியுடைய குழந்தைகள் மூலமாக கிடைக்கும் நாள்!!

Photo of author

By Selvarani

சிம்மம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கணவன் மனைவியுடைய குழந்தைகள் மூலமாக கிடைக்கும் நாள்!!

சிம்மராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பஞ்சமஸ்தானமாகிய பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் கணவன் மனைவியுடைய குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி பெறும் நாள்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் மறையும். ஆன்மீக சிந்தனைகள் அதிகம் எழுவதால் அருகில் இருக்கும் ஆலயங்களுக்கு தரிசனம் செய்வதற்காக செல்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொழில் மற்றும் வியாபார நிமித்தமாக பயண வாய்ப்புகள் மேம்படும். உடல் ஆரோக்கியம் ஆரோக்கிய சீராகவும் சிறப்பாகவும் இருக்கும்.

மாணவ மாணவிகள் கல்வியில் அதிகம் முன்னேற்றம் காண்பார்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனுகூலமாக செயல்படுவது மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக செல்லும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவான சூழ்நிலை அமையும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு குழந்தைகள் மூலம் நன்மைகள் கிடைக்கும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்துவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு ஆன்மீக சிந்தனைகள் அதிகரிக்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பல வண்ண நிற ஆடை அணிந்து எம்பெருமான் விநாயகப் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.