சிம்மம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு அமைதியுடன் செயல்பட வேண்டிய நாள்!!

0
218
#image_title

சிம்மம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு அமைதியுடன் செயல்பட வேண்டிய நாள்!!

சிம்ம ராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு அமைதியுடன் செயல்பட வேண்டிய நாள். சந்திர பகவான் அஷ்டம ராசியில் இருப்பதால் சில குழப்பங்கள் வந்து சேரும் என்பதால் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. வாகன பயணங்களில் சற்று கவனத்துடன் செயல்படுவது நல்லது. குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி சிறு சிறு குழப்பங்கள் வரும் என்பதால் அமைதியாக யோசித்து செயல்பட வேண்டும்.

வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் மன அமைதி குறையலாம். தொழில் மற்றும் வியாபார தொடர்பு சில இன்னல்கள் இடையூறுகள் வரலாம் என்பதால் கூடுமானவரை கூட்டாளிகளையும் வாடிக்கையாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. அரசியலில் இருக்கும் நண்பர்கள் அமைதி காக்க வேண்டும். கலைத்துறை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வருவதில் சில இன்னல்கள் வரலாம்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் அச்சம் தோன்றும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்றால் கடுமையாக பாடுபட வேண்டி வரும். மூத்த வயது சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கிய சீராக இருப்பதற்கு மாற்று மருத்துவத்தை நாடுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எந்த ஒரு முயற்சியும் சற்று இழுபறி ஆகலாம்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஊதா நிறம் ஆடை அணிந்து ஸ்ரீதேவி கருமாரியம்மன் வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani