அடுத்த வாரத்தில் இருந்து லியோ அப்டேட்டுகள் ஆரம்பம்!!! தயாரிப்பாளர் லலித் குமார் பேட்டி!!!

0
103
#image_title

அடுத்த வாரத்தில் இருந்து லியோ அப்டேட்டுகள் ஆரம்பம்!!! தயாரிப்பாளர் லலித் குமார் பேட்டி!!!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வயும் லியோ திரைப்படத்தை பற்றிய அப்டேட்டுகள் அடுத்த வாரத்தில் இருந்து வெளியிடப்படும் என்று லியோ திரைப்படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் அவர்கள் பேட்டியளித்துள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகியுள்ளது. லியோ திரைப்படத்தில் பல முன்னனி நடிகர்கள் நடித்துள்ளனர். லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ளது.

லியோ திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் லலித் குமார் லியோ திரைப்படத்தை தயாரித்துள்ளார். இந்நிலையில் லியோ திரைப்படத்தின் அப்டேட்டுகள் அடுத்த வாரத்தில் இருந்து வெளியிடப்படும் என்று நேற்று(செப்டம்பர்10) கூறியுள்ளார்.

நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள மகாராஜா திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் லாஞ்ச் நிகழ்ச்சியில் லியோ திரைப்படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் அவர்கள் கலந்து கொண்டு பேசினார்.

அப்பொழுது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தயாரிப்பாளர் லலித் குமார் அவர்கள் “அடுத்த வாரத்தில் இருந்து லியோ திரைப்படத்தின் அப்டேட்டுகள் வெளியிடப்படும். லியோ திரைப்படத்திற்கான டிக்கெட் புக்கிங் தமிழ் நாட்டில் லியோ திரைப்படத்தின் ஆடியோ லாஞ்ச் முடிந்த பிறகு தொடங்கப்படும். ஆடியோ லாஞ்ச் தமிழ்நாட்டில் தான் நடக்கப் போகின்றது. ஆனால் இன்னும் ஆடியோ லாஞ்ச் நடைபெறும் இடத்தை முடிவு செய்யவில்லை.

லியோ திரைப்படத்தை நடிகர் விஜய் அவர்கள் இன்னும் பார்க்கவில்லை. நான் லியோ திரைப்படத்தின் முதல் பாதியை பார்த்து விட்டேன். படம் அருமையாக வந்துள்ளது. லியோ திரைப்படம் அனைத்து விதமான ஆடியன்ஸ்க்கும் பிடிக்கும் படமாக இருக்கும். லியோ திரைப்படம் யுகே நாட்டின் புக்கிங்கில் 24 மணிநேரத்தில் 10000க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகளை புக் செய்யப்பட்ட முதல் இந்திய திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது” என்று கூறினார்.

 

Previous articleமழையால் பாதிக்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான் ஆட்டம்!!! ரிசர்வ் டே-க்கு போட்டி மாற்றம்!!!
Next articleசந்திரபாபு நாயுடு கைது எதிரொலி!!! ஆந்திர மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்!!!