பாசிச பாஜக வீழ்ந்து இந்தியா வெல்லட்டும்! முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் பதிவு! 

Photo of author

By Sakthi

பாசிச பாஜக வீழ்ந்து இந்தியா வெல்லட்டும்! முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் பதிவு!
வரும் ஜூன் 4ம் தேதி இந்திய நாட்டின் புதிய விடியலுக்கான தொடக்கமாக இருக்கும் என்றும் பாசிச பாஜக வீழ்ந்து இந்தியா வெல்லட்டும் என்றும் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவில் தற்பொழுது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. இது வரை ஆறு கட்டத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் இன்று(ஜூன்1) மீதமுள்ள தொகுதிகளுக்கு கடைசிக் கட்டத் தேர்தல் நடைபெற்று வருகின்றது.
இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. அரசியல் தலைவர்களும், மக்களும் புதிய பிரதமர் வருவாரா அல்லது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மீண்டும் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்பாரா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இதையடுத்து நாடாளுமன்றத் தேர்தல் முடியவுள்ள நிலையில் இந்தியா கூட்டணி கட்சியினர் டெல்லியில் கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர். இந்த கூட்டத்தில் திமுக சார்பாக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்பொழுது முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் இந்தியா கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் கலந்து கொள்ளும் நபர் யார் என்பதை அறிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் “இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கமாக ஜூன் 4ம் தேதி அமையும். இது தொடர்பாக டெல்லியில் இந்தியா கூட்டணித் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் திமுக கட்சி சார்பாக திமுக கட்சியின் பொருளாளரும் நாடளுமன்ற கழகக் குழுத் தலைவருமாக இருக்கும் டி.ஆர் பாலு அவர்கள் பங்கேற்கவுள்ளார். பாசிச பாஜக வீழட்டும். இந்தியா வெல்லட்டும்” என்று தெரிவித்துள்ளார்.