கிரிகெட்டை ஒலிம்பிக்கில் சேர்க்கலாம்! புதுவித யோசனை சொன்ன வீரர்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் தற்போது 10 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டி இந்த மாதம் 19 ம் தேதி தொடங்கி டிசம்பர் 4 ம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த போட்டியில் தென்ஆப்ரிக்க அணியின் முன்னாள் கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் முதல் முறையாக பங்கேற்க உள்ளார்.
இந்த போட்டி குறித்து காணொளியின் வாயிலாக அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார். நான் மூன்று வடிவிலான போட்டிகளிலும் நீண்ட காலமாகவே விளையாடி வருகிறேன். தற்போது 10 ஓவர் போட்டிகள் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. என்னை போன்ற வீரர்கள் இதுபோன்ற போட்டிகளில் விளையாட ஆர்வமாக உள்ளோம். விரைவில் முடிந்துவிடும் இந்த மாதிரியான போட்டிகளை ஒலிம்பிக்கில் பயன்படுத்த முடியும் என்றும் கூறியுள்ளார்.
விரைவில் முடிவுகள் கண்டறியப்படும் என்றும், 10 ஓவர் போட்டிகளுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்றும் கூறினார். மேலும் விறுவிறுப்பு நிறைந்த இந்தப் போட்டிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.