முதலமைச்சர் வேட்பாளர் விவகாரம் தொடர்ந்து அதிமுகவை சீண்டும் பாஜக! அதிர்ச்சியில் அதிமுக தலைமை!

Photo of author

By Sakthi

சட்டசபை தேர்தலுக்கு பிறகுதான் பாஜக கூட்டணி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று முடிவு செய்யப்படும் என்று தமிழக பாஜகவின் மேலிடப் பொறுப்பாளர் சி.டி. ரவி தெரிவித்திருக்கின்றார். இந்த விவகாரமானது அதிமுக மற்றும் பாஜக தொண்டர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிலையில் தேர்தலை சந்திப்பதற்காக அதற்கான ஆயத்தப் பணிகளில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றனர். ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிக்க போவதில்லை என்று அறிவித்து இருக்கின்ற நிலையில், வழக்கம் போல அதிமுக மற்றும் திமுக ஆகிய கடுமையான போட்டி என்ற நிலையை மறுபடியும் உருவாகியிருக்கிறது. இந்தநிலையில் இந்த முறை எப்படியாவது தமிழகத்தில் காலூன்றி விடவேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக பாஜக தீவிரமாக பணியாற்றி வருகின்றது. இந்த நிலையில் அதிமுகவின் கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பான விவாதம் சில நாட்களாகவே அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

எடப்பாடி பழனிச்சாமி அவர்களை ஒருமனதாக முதலமைச்சர் வேட்பாளராக கூட்டணிக் கட்சியான பாஜக வெளிப்படையாகவே ஏற்க மறுத்து வருகின்றது. தேசிய கட்சியான பாஜகவின் தலைமை அதிமுக கூட்டணி முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்கும் என்று தொடர்ந்து தமிழக பாஜகவின் தலைவர் முருகன் போன்ற பாஜக தலைவர்கள் தெரிவித்து வருவது அதிமுக தொண்டர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கின்றது. அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் எனவும், அதை ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் அதிமுக தனியாக போட்டியிடவும் தயங்காது எனவும் முக்கிய அமைச்சர்கள் பாஜகவை எதிர்த்து வருகிறார்கள் .அதோடு அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளரை ஏற்றுக் கொள்பவர்கள் உடன் மட்டுமே கூட்டணி தொடரும் எனவும் எதிர் வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி அமைக்கப்படும் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் ,மற்றும் முனுசாமி போன்றோர் திட்டவட்டமாக தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், இன்று காலை தமிழக பாரதிய ஜனதா சார்பாக சட்டசபை தொகுதிகளுக்கான மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்கள் கூட்டம் அண்ணாநகரில் இருக்கின்ற தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடந்தது. அதில் தமிழக பாஜகவின் மாநில தலைவர் எல்.முருகன் பாஜகவின் தேசிய பொதுச் செயலாளரும் தமிழக பாஜகவின் பொறுப்பாளருமான சி .டி. ரவி. தமிழக பாஜகவின் இணைப்பாளர் சுதாகர் ரெட்டி போன்றோர் பங்கேற்றார்கள். இதிலே மற்ற கட்சிகளை சார்ந்த முக்கிய பிரபலங்கள் பாஜகவில் இணையும் நிகழ்வும் நடந்தது. பாஜகவின் உட்கட்டமைப்பு தேர்தலில் ஆற்றவேண்டிய முக்கிய பணிகள் தொடர்பாகவும் அப்போது விவாதம் செய்யப்பட்டது இதற்கு பிறகு பாஜகவின் மேலிட பொறுப்பாளர் சி.டி .ரவி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது இதுவரையில், அதிமுக மற்றும் பாஜக கூட்டணியின் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக உறுதி செய்யப்படவில்லை. தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரே அது முடிவு செய்யப்படும். தேர்தலுக்குப் பின்னர் பெரும்பான்மை குறித்து தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் ஒன்று கூடி முதலமைச்சர் வேட்பாளரை தேர்வு செய்வார்கள். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசிக்கப்படும். தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கின்ற பாஜக இந்த முறை எப்படியாவது சட்டசபைத் நுழைந்துவிட வேண்டும் என்று மிகத் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பாஜக கணிசமான இடங்களில் வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சிக்கு முயற்சி செய்யும் இவ்வாறு அவர் தெரிவித்திருக்கின்றார்.