நாடளுமன்றத்தில் கட்டாயம் செய்வோம்! விவசாயிகள் அதிரடி!
நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்கால கூட்டத்தொடர், மற்றும் குளிர்கால கூட்டத்தொடர் என மூன்று கூட்டத்தொடர்கள் நடைபெறுவது இயல்பான ஒன்றாகும். இந்த வருடம் கொரோனாவின் இரண்டாவது அலையின் காரணமாக இந்த ஆண்டு பட்ஜெட் தொடரில் பாதிப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் வரும் 19ஆம் தேதி தொடங்கி 19 நாட்கள் நடைபெறும் என அதிகாரபூர்வமான தகவல்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத் தொடரின் மூலம் எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களை பேசும் எனவும், ஆளுங்கட்சியினருக்கு எதிர்ப்பு கிளப்பும் எனவும் கூறப்படுகிறது. இந்த சூழலில் சம்யுக்த் கிசான் மோர்ச்சா என்ற விவசாய அமைப்பு கூறும்போது, வேளாண் பெருமக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த பருவகால கூட்டத்தொடரை அரசு பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளது.
கடந்த நவம்பர் மாதத்திலிருந்து டெல்லி அருகே போராட்டம் நடத்திய நிலையில் அரசின் எந்த ஒரு அரசு அதிகாரியும் தங்களை கவனிக்காததால், அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் எச்சரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பி வைக்கப்படும், என தெரிவித்துள்ளோம். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்திற்கு வெளியே வரும் 22ஆம் தேதி முதல் கூட்டத்தொடர் முடியும் வரை ஒரு நாளைக்கு 200 பேர் என்ற விகிதத்தில் நாங்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம், என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டு விவசாயிகள் போராடி பார்த்து முடியாமல் திரும்பி வந்து விட்டனர். ஆனால், வேறு மாநில விவசாயிகளோ மனம் தளராமல், எவ்வளவு கஷ்டங்களை சந்தித்தாலும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இதை எல்லாம் அரசு கருத்தில் கொள்ளுமா? என்று விவசாய குழுவினர் மிகவும் எதிர்பார்கிறார்கள்.