மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் நர்சிங் படித்த 169 செவிலியர்கள் நேற்று ஒன்று இணைந்து தற்கொலையை தடுப்பது தொடர்பாக உறுதி மொழியை மேற்கொண்டார்கள்.
இதுவரையில் கவுன்சிலிங் வழங்கி ஆயிரத்திற்கும் அதிகமானவரின் உயிர்களை இந்த செவிலியர்கள் காப்பாற்றி உள்ளார்கள் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் 2004-07 வரையில் நர்சிங் படித்த 169 பேர் என்று பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வருகிறார்கள் அவ்வப்போது இவர்கள் சந்தித்து வந்தனர். தங்களுடைய சந்திப்பு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என அவர்கள் நினைத்தனர்.
ஆகவே இதற்கான முயற்சிகளை சென்னை புலனாய்வு பிரிவு டிஎஸ்பி அருண்மொழி மேற்கொண்டார். மதுரையில் நேற்று 169 பேரும் வாழ்வோம், வாழ்விப்போம் என்ற பெயரில் ஒன்று சேர்ந்தார்கள்.
தற்கொலை குறித்த விழிப்புணர்வை உண்டாக்கும் விதத்தில் உறுதிமொழி மேற்கொண்டனர். அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்கள் தமிழகத்தில் முதன்முறையாக இந்த உறுதி மொழியை மேற்கொண்டனர்.
இது தொடர்பாக டிஎஸ்பி அருண்மொழி தெரிவித்ததாவது இரண்டு வருடங்களாகவே நாங்கள் தற்கொலை முயற்சியை தடுப்பதற்கான கவுன்சிலிங் வழங்கி வருகிறோம் என தெரிவித்துள்ளார்.
அதோடு நர்சிங் படித்த நான் 2019 ஆம் ஆண்டில் டிஎஸ்பியாக தேர்வு செய்யப்பட்டாலும் நண்பர்களுடன் ஒன்று இணைந்து இந்த பணியை செய்து வருகிறேன் என கூறியுள்ளார்.
அரசின் இலவச டோல் ஃப்ரீ நம்பர் 104க்கு போன் செய்தால் எங்களுக்கு தகவல் வழங்குவார்கள் அருகில் இருந்தால் நேரில் சென்று கவுன்சிலிங் வழங்குவோம். அப்படி அருகில் இல்லாத பட்சத்தில் போனிலேயே கவுன்சிலிங் வழங்குவோம் என தெரிவித்துள்ளார்.
இதுவரையில் ஆயிரத்திற்கும் அதிகமானோரின் உயிரை காப்பாற்றியுள்ளோம். தற்கொலை எதற்கும் தீர்வல்ல என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.
இதனை தவிர்த்து அரசு போட்டி தேர்வுகளுக்கு இளைஞர்களை தயார் செய்யும் ஏபிஜே இலவச கோச்சிங் வகுப்பை நடத்தி வருகிறோம் இதுவரையில் 70 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இதன் மூலமாக பயன் பெற்றுள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார் அருண்மொழி.