ராகுல் காந்தியின் வீடியோ பதிவை நீக்கும்படி பேஸ்புக் நிறுவனத்திற்கு வந்த கடிதம்! காரணம் இதுதானா?

Photo of author

By Hasini

ராகுல் காந்தியின் வீடியோ பதிவை நீக்கும்படி பேஸ்புக் நிறுவனத்திற்கு வந்த கடிதம்! காரணம் இதுதானா?

டெல்லியில் கடந்த வாரங்களில் 9 வயதே ஆன சிறு குழந்தை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது. அதை தொடர்ந்து சிறுமியின் பெற்றோரை சந்தித்த ராகுல் காந்தி அவர்களிடம் ஆறுதலாக பேசிவிட்டு அவர்களுக்கு துணையாக இருப்பதாகவும் கூறி வாக்களித்தார். மேலும் அந்த குழந்தையின் பெற்றோரின் புகைப்படத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் மறைக்காமலே பதிவிட்டு இருந்தார். அதன் காரணமாக ட்விட்டர் அவரின் கணக்கை முடக்கியது.

இதைத்தொடர்ந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கமும் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ட்விட்டரின் இந்த நடவடிக்கையை மிகக் கடுமையாக விமர்சித்து ராகுல்காந்தி இன்று வீடியோ பதிவு ஒன்றையும் பேஸ்புக் மூலம் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் பேஸ்புக் நிறுவனத்திற்கு கடிதம் ஒன்று எழுதப்பட்டது.  அதில் ராகுல்காந்தி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ பதிவை நீக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் உடன் பேசிய வீடியோவை ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். அதன்மூலம் அந்த குழந்தையின் பெற்றோர்கள் முகம் மற்றும் அடையாளங்கள் மறைக்க படாமல் இருப்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. எனவே இந்த பதிவை நீக்குவதோடு ராகுல் காந்திக்கு எதிராக உரிய நடவடிக்கையும்  எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.