மார்ச் மாதம் 29ஆம் தேதி சனிபகவான் பெயர்ச்சி ஆக உள்ளார். இந்த சனிப்பெயர்ச்சியானது துலாம் ராசி சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு நஷ்டங்கள் லாபங்களாகவும், கஷ்டங்கள் பல யோகங்களை தரக்கூடிய காலமாகவும் அமையும். இத்தனை காலங்கள் இருந்த தடைகள், பிரச்சனைகள், பொருளாதார ஏற்ற இறக்கங்கள் ஆகிய அனைத்தும் சரியாகும். குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் மற்றும் தொழில் ரீதியாக உள்ள பிரச்சனைகள் ஆகிய அனைத்திற்கும் ஒரு நல்ல தீர்வு கிடைக்கக்கூடிய காலமாக இனி வரக்கூடிய காலங்கள் அமையும்.
இந்த சனிப்பெயர்ச்சியானது 2025 ஆம் ஆண்டு தொடங்கி 2027 ஆம் ஆண்டு வரை இருக்கும். சுவாதி நட்சத்திரம் என்பது ராகுவின் நட்சத்திரமாகும். ராகுவின் ஆளுமை திறன் கொண்ட இந்த சுவாதி நட்சத்திரக்காரர்கள் எந்த ஒரு செயலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தாலும், அதனை எத்தனை இடையூறுகள் ஏற்பட்டாலும் செய்து முடித்தே ஆக வேண்டும் என்ற வைராக்கியம் கொண்டு செய்து முடிப்பவர்கள் ஆக இருப்பார்கள்.
உங்கள் வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் சிறு சிறு பிரச்சனைகளை நீங்கள் சந்தித்து வந்தாலும், அதனால் ஏற்பட்ட அனுபவங்களின் மூலம் தற்போது அனைத்திலும் சிறந்து விளங்குபவர்களாக இருப்பீர்கள். மேலும் இந்த சனிப்பெயர்ச்சி உங்களை உச்சத்திற்கு கொண்டு செல்வதாகவும் இருக்கும். கெடுக்கின்ற கிரகங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக அமைகின்ற காலமாகவும் இந்த சனிப்பெயர்ச்சி காலம் அமையும்.
குடும்ப பிரச்சினைகள், தொழில் ரீதியான பிரச்சனைகள், நாம் விரும்பிய சில காரியங்கள் என இதுவரை நடக்காத அனைத்து காரியங்களும் இனி சனி பகவானின் அருளால் நிச்சயம் நடக்கும். கடன் தொல்லை, கஷ்டங்கள், நம்பிக்கை துரோகம் ஆகிய அனைத்தும் நீங்கும். இந்த ராசி, நட்சத்திரங்களை காட்டிலும் லக்னம் நன்றாக இருந்தால் வரப் போகின்ற யோகமானது இரண்டு மடங்காக அதிகரிக்கும்.
அதேபோன்று தசா புத்தியும் ஜாதகத்தில் நன்றாக இருக்க வேண்டும்.
இவை அனைத்தும் ஒருவரது ஜாதகத்தில் நன்றாக இருந்தால் இந்த சனி பெயர்ச்சியானது பலவிதமான அதிர்ஷ்டங்களை தரக்கூடிய காலமாக அமையும். கடுமையாக உழைக்கக் கூடியவர்களும் துலாம் ராசியினர் தான். அவ்வாறு இருக்கையில் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் என்பது நிச்சயம் கிடைக்கும்.