சரியான காப்பீட்டு திட்டத்தை தேர்ந்தெடுப்பது பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல் சில சமயங்களில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கும் கை கொடுக்கும் இது போன்ற திட்டங்கள் எதிர்பாராத சிரமங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கிறது.
பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் நிச்சயமாக இது போன்ற திட்டங்களை தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம். அது அவர்களுடைய எதிர்காலத்தை சிறப்பானதாகும். அதேபோல பெண் குழந்தைகளுக்கான பாலிசியை தேர்ந்தெடுக்கும் போது, சரியான காப்பீட்டு நிறுவனத்தை தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம்.
பெண் குழந்தையின் எதிர்கால செலவு அது படிப்போ அல்லது திருமணமோ எதுவாக இருந்தாலும் அதை சிறப்பாக மாற்றும் கடமை பெற்றோருக்கு இருக்கிறது. ஆகவே தான் இந்தியாவின் மிகச்சிறந்த காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி பெண் குழந்தைகளுக்கான சில சிறந்த எல்ஐசி பாலிசிகளை செயல்பாட்டில் வைத்திருக்கிறது. அது தொடர்பாக தற்போது விரிவாக பார்க்கலாம்.
பெற்றோர்கள் உயிரிழந்தால் குழந்தையின் பள்ளி கட்டணத்தை செலுத்தவும், குழந்தையின் கல்வியை முடிக்கவும் இது உதவியாக இருக்கும். இந்தத் திட்டத்தில் விண்ணப்பதாரர்கள் பல்வேறு கூடுதல் சலுகைகளுடன் நேரடியாக மொத்த தொகையை பெறும் முறையையும் செய்யலாம். இந்த காப்பீட்டில் இருந்து கடன் வாங்குவதும் சாத்தியமாகிறது.
எல் ஐ சி ஜீவன் தருண் என்பது பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டி உள்ளிட்ட இருவராலும் பெறக்கூடிய ஒரு பாலிசியாகும். இதில் தங்களுடைய பெண் குழந்தையின் எதிர்கால தேவைகளுக்கு உதவி புரிவதற்கும், பாதுகாப்பதற்கும் பல அம்சங்கள் இருக்கின்றன. குறிப்பாக தங்களுடைய குழந்தையின் கல்வி மற்றும் எதிர்கால பாதுகாப்பிற்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டது. இந்த திட்டம் மலரும் குழந்தையின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும்.
இது பிரீமியம் அம்சத்தை கொண்டு இருக்கிறது முதிர்வு தொகை (10D) வரி இல்லாதது 80cயின்படி வருமான வரி விலக்கு வழங்கப்படும். பாலிசி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இரண்டு வருடங்கள் அல்லது குழந்தை 8 வயதை அடையும் போது அந்த பெண் குழந்தைக்கு ரிஸ்க் கவரேஜ் கிடைக்கும். பெற்றோரின் மரணத்தின் போது செலுத்தப்பட்ட அனைத்து பிரிமியங்களில் 105% அல்லது மொத்த காப்பீட்டில் 125 சதவீதம் பெறலாம்.
பாலிசி குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகையானது 75000 மற்றும் அதிகபட்ச தொகை கட்டுப்பாடு இல்லை. குறைந்தபட்ச நுழைவு வயிறு குழந்தை பிறந்து 90 நாட்கள் முதல் 12 வயது வரையில்.
பிரீமியம் செலுத்தும் காலம் குறைந்தபட்சம் 8 வருடங்கள் மற்றும் அதிகபட்சமாக 20 வருடங்கள் ஆகும். ஆனாலும் 5 வயது குழந்தை விவகாரத்தில் 15 ஆண்டுகள் வரையில் செலுத்தலாம். கூடுதல் விவரங்களுக்கு எல்ஐசி ஜீவன் தருண் பாலிசி தொடர்பாக இணையதளத்தில் தேடி பார்க்கவும்.