வாழ்க்கை ஒரு வட்டம்! இந்தியாவை ஆண்ட இங்கிலாந்தை ஆளப்போகும் இந்தியர்?

0
163

நம்முடைய நாட்டை சுமார் 200 ஆண்டுகளுக்கு மேலாக இங்கிலாந்து ஆட்சி செய்தது ஆனாலும் தற்போது காலச்சக்கரமானது இந்தியா பக்கம் திரும்பி இருக்கிறது. இந்தியாவைச் சார்ந்த ஒருவர் இங்கிலாந்து நாட்டை ஆட்சி செய்யும் காலமும் தற்போது கனிந்திருக்கிறது.

ஆம் இந்திய வம்சாவழியை சார்ந்த ஒருவர் இங்கிலாந்து நாட்டின் பிரதமராக வருவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்ததை தொடர்ந்து இந்தியாவை பூர்விகமாகக் கொண்ட ரிஷி சுனக் பிரதமராக வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இருந்து வந்த போரிஸ் ஜான்சன் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். அவர் மீது நோய் தொற்று காலத்தில் மது விருந்து வழங்கியது, போன்ற பல குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.

கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த நம்பிக்கை இல்லாத தீர்மானம் தோல்வியடைந்ததன் காரணமாக, போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியிலிருந்து தூக்கி எறியப்படுவதிலிருந்து தவிர்க்கப்பட்டார்.

இந்த நிலையில், கட்சியின் துணை தலைமை கொறடாவாக இடை நீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிரீஸ் பின்சாரை நியமனம் செய்த விவகாரத்தில் சர்ச்சை ஏற்படவே போரிஸ் ஜான்சனுக்கு கட்சியில் எதிர்ப்பு கிளம்பியது.

மோரிஸ் ஜான்சனின் அமைச்சரவையில் இந்தியாவை பூர்விகமாகக் கொண்ட ரிஷி சுனக், பாகிஸ்தானை பூர்விகமாகக் கொண்ட சாஜித் ஜாவித் உள்ளிட்டோர் அடுத்தடுத்து தங்களுடைய பதவியை ராஜினாமா செய்தனர்.

இவர்களையடுத்து மேலும் சில அமைச்சர்கள் தங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவி என 50க்கும் மேற்பட்டோர் ராஜினாமா செய்தனர்.

கட்சியில் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக போரிஸ் ஜான்சன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் வரையில் காபந்து பிரதமராக இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

இதனையடுத்து புதிய பிரதமரை தேர்வு செய்யும் நடவடிக்கையில் கன்சர் வேட்டிவ் கட்சி தற்போது தீவிரமாக இறங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், இங்கிலாந்தின் புதிய பிரதமர் யார் என்பது செப்டம்பர் மாதம் 5ம் தேதி அறிவிக்கப்படும் என்று கன்சர்வேட்டிவ் கட்சி கூறியிருக்கிறது. அதில் இந்தியா வம்சாவளியை சார்ந்தவரும் முன்னாள் நிதியமைச்சரான ரிஷி சுனக் அடுத்த பிரதமராக வருவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

ஏனெனில் அவர்தான் தற்போதைய நிலையில் கட்சியின் செல்வாக்கு மிக்க நபராக இருக்கிறார். இவர் இங்கிலாந்தின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டால் இங்கிலாந்தை இந்தியர் ஒருவர் ஆளும் பெருமையை பெறுவார்.

சுமார் 200 வருடங்களுக்கு மேலாக இந்தியாவை ஆண்ட இங்கிலாந்தை இந்தியர் ஒருவர் தன்னுடைய திறமையால் வளர்ச்சியடைந்து ஆளப்போவது இந்திய நாட்டிற்கு பெருமை என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.

இங்கிலாந்து பிரதமர் ஆவதற்கான வாய்ப்பில் முன்னணியில் இருக்கும் ரிஷி சுனக் அவர்களின் பூர்வீகம் இந்தியா. இவர் ஆக்ஸ்போர்ட் மற்றும் ஸ்டார்போர்ட் பல்கலைக்கழகங்களில் படித்து பட்டம் பெற்றார்.

அதோடு இவர் infosis நிறுவனத்தின் இணை நிறுவனத்தின் மகள் அக்ஷதா மூர்த்தியின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2015 ஆம் வருடம் நாடாளுமன்ற உறுப்பினராக இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இவர் 2020 ஆம் வருடத்தில் அந்த நாட்டின் நிதி அமைச்சராக பொறுப்பேற்றார்.