ஒன்பது அதிர்ஷ்ட லட்சுமிகள் உள்ள விளக்கை ஏற்றுங்கள்!! பலன்கள் பெறுங்கள்!!

0
113
#image_title

ஒன்பது அதிர்ஷ்ட லட்சுமி உள்ள விளக்கை ஏற்றுங்கள்!! பலன்கள் பெறுங்கள்!!

வெள்ளிக்கிழமை இது செஞ்சா பண கஷ்டம் நீங்கி, வீட்டில் செல்வம் அதிகம் சேரும். வெள்ளிக்கிழமை ஆனது தெய்வங்களுள் மகாலட்சுமி தேவிக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் பலரும் மகாலட்சுமி தேவியின் அருளை பெற பலவாறு பூஜைகளை செய்வார்கள். இதனால் வீட்டில் செல்வம் சேரும், கடன் பிரச்சனை நீங்கும் மற்றும் வீட்டில் சந்தோஷம் நிலைத்திருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதேபோன்று ஒன்பது அதிர்ஷ்ட லக்ஷ்மிகள் உள்ள விளக்கு கொண்டு விளக்கேற்றினால் நன்மை பெற முடியும் என்பதை பற்றி பார்க்கலாம்.

மகாலட்சுமி (முத்திரு ஆதிலக்ஷ்மி)- பிரக்குரு என்று சொல்லக்கூடிய முனிவருடைய மகளாக அவதரித்த தெய்வம். இத்தெய்வம் திருமகளின் மிகப் பழமையான தோற்றம். முத்திரு என்று சொல்லக்கூடிய ஆதிலட்சுமியை வணங்கி வருவதினால் கணவன் மனைவி இடையே இருக்கும் பிரச்சினைகள் நீங்கி நல்ல செல்வ செழிப்புடன் இருக்கலாம்.

செல்வ திரு தனலட்சுமி அம்மனை ஒன்பது அதிஷ்டலட்சுமி உள்ள விளக்கில் இருக்கும் படி வாங்கி வணங்கும் பொழுது செல்வம் பெருகும்.

தானிய திரு தானிய லட்சுமி உள்ள விளக்குகளை ஏற்றி வணங்கும் பொழுது வீட்டில் தானியங்கள் நிறைந்து காணப்படும்.

வேல திரு கஜலட்சுமி-கால்நடைகள் மூலம் வரும் லட்சுமி ஆகையால் வீட்டில் உள்ள கால்நடைகள் ஆரோக்கியமாம இருந்து அதன் மூலம் செல்வ செழிப்புகள் பெருகும்.

அன்னை திரு சந்தான லட்சுமி அம்மனை வணங்கி வரும் பொழுது குழந்தை பாக்கியம் கிடைத்து மகிழ்வீர்கள்.

திரு திரு வீரலட்சுமியை வணங்கி வரும் பொழுது கஷ்டமான காலகட்டங்களிலும் தைரியத்தை தரக்கூடிய கடவுள்.

வெற்றி திரு விஜயலட்சுமியை விளக்கேற்றி வணங்கும் பொழுது எடுக்கும் வேலைகளில் வெற்றி பெற்று மகிழும் வாய்ப்புகள் கிடைக்கும்.

கல்வித் திரு வித்யா லட்சுமி அம்மனை வணங்கி வரும்பொழுது கல்வியில் திறம்பட செயல்பட முடியும்.

இனி 9 அஷ்டலட்சுமிகள் உள்ள விளக்கை ஏற்றி அதில் கிடைக்கும் பலன்களை பெற்று மகிழுங்கள்.