நமது விஞ்ஞானம் வளர்ந்த பிறகு குண்டு பல்பிலிருந்து எல்இடி பல்பு என மாறிவிட்டோம். ஆனால் மின்சாரம் கண்டுபிடிப்பதற்கு முன்பு மக்கள் அனைவரும் விளக்கினை கொண்டு தான் வீட்டினை பிரகாசமாக வைத்து வந்தனர். இந்த தீபத்தின் ஒளியை வைத்து தான் அந்த காலங்களில் கோவில்களிலும், வீடுகளிலும் தெய்வ வழிபாட்டினை செய்து வந்தனர். எனவேதான் அந்த கால வழிபாட்டு முறையினை மறவாமல் இருக்க இன்றைக்கும் சாமி ஊர்வலம் வருவதற்கு முன்பாக தீ பந்தத்தினை பிடித்து வருவார்கள்.
கோவில்களிலும், வீடுகளிலும் தீபம் ஏற்றுவது ஒளிமயமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். ஏனெனில் ஒளி இருக்கக்கூடிய இடத்தில் தான் இன்பம் இருக்கும் இருள் இருக்கக்கூடிய இடத்தில் துன்பமே நிலவும் என்பது ஐதீகம். இவ்வாறு ஒவ்வொரு இடங்களிலும் ஒளியானது பரவ வேண்டும் என்பதற்காக பல இடங்களில் விளக்குகளை ஏற்றலாம்.அவ்வாறு பல விளக்குகளை ஏற்றுவது மூலம் ஏற்படும் நன்மைகளை தற்போது காண்போம்.
முதலாவதாக நமது வீட்டின் வாசலில் போடக்கூடிய கோலத்தில் வைக்கக் கூடிய தீபம் தெய்வ சக்தியை ஈற்கும் தன்மையை பெற்றுள்ளது. அடுத்ததாக வீட்டின் மாடத்தில் வைக்கக் கூடிய தீபமானது தெய்வத்தின் அனுகூலத்தை பெற்று தருவதாக அமைகிறது. அதாவது வாசலில் வைத்த தீபத்தின் மூலம் தெய்வத்தை ஈர்த்து நமது வீட்டில் தங்க வைப்பதாக அர்த்தம்.
வீட்டின் நிலை வாசலில் இரண்டு புறமும் வைக்கக்கூடிய தீபம் ஆனது நிலைத்த தெய்வ சக்தியை நமது வீட்டிற்கு தருவதாக அர்த்தம். எனவேதான் ஒவ்வொரு வீட்டிலும் நிலை வாசல் வைக்கும் பொழுதே அதில் பல தானியம், நவரத்தினங்கள், நாணயம், தங்கம் வெள்ளி போன்ற பொருட்களை வைப்பார்கள். இவ்வாறு செய்வதற்கு காரணம் தெய்வ சக்திகள் நமது வீட்டில் நிலைத்து இருப்பதற்காகவும், துர்தேவதைகள் அந்த படியை தாண்டி உள்ளே செல்லக்கூடாது என்பதற்காகவும் தான்.
வீட்டின் முற்றத்தில் விளக்கு ஏற்றுவது அந்த வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை தருவதாக அர்த்தம். அடுத்ததாக வீட்டின் சமையலறையில் வைக்கக்கூடிய தீபமானது அந்த வீட்டில் அன்னக் குறைவை ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது. அடுத்ததாக நமது வீட்டின் பூஜை அறையில் விளக்கு ஏற்றுவது சர்வ மங்களத்தை உண்டாக்கும். அதாவது அனைத்து காரியங்களிலும் நன்மையை தருவதாக இருக்கும்.
மேலே குறிப்பிட்ட அனைத்து இடங்களிலும் விளக்கினை ஏற்ற முடியவில்லை என்றாலும் கூட பூஜை அறையில் ஏற்றக்கூடிய தீபமானது அனைத்து மங்களத்தையும் ஏற்படுத்தித் தரும். அடுத்ததாக வீட்டின் பின்பகுதியில் விளக்கினை ஏற்றுவது நமது வீட்டில் உள்ளவர்களின் ஆயுளை அதிகரித்து தரும். மாட்டுத் தொழுவம் உள்ளவர்கள் அதில் விளக்கேற்றும் பொழுது லட்சுமி கடாட்சம் மற்றும் அனைத்து தேவர்களின் அருளும் கிடைக்கும். அதேபோன்று குலதெய்வத்தின் அருளையும் பெற்றுத்தரும். மாட்டுத் தொழுவத்தில் விளக்கு ஏற்றுவது என்பது பலவிதமான நன்மைகளை தரக்கூடியதாக அமையும்.
நமது வீட்டில் உள்ள குப்பைகளை கொட்டி எரிக்கும் இடத்தில் விளக்கினை ஏற்றுவது துர்தேவதைகள் நமது வீட்டிற்குள் வராமல் தடுக்கும். இத்த அனைத்து இடங்களிலும் விளக்கினை வைக்க முடியும் என்பவர்கள் வைக்கலாம் அல்லது வைக்க முடியாதவர்கள் பூஜை அறையில் மட்டும் விளக்கினை ஏற்றிக் கொள்ளலாம். இவ்வாறு அனைத்து இடங்களிலும் விளக்கினை ஏற்ற வேண்டும் என்பதற்காகத்தான் கார்த்திகை தீபம் என்ற பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இவை அனைத்தும் சிறிய காரியங்கள் தான் ஆனால் அவை நமக்கு மிகப்பெரிய நன்மைகளை தேடித் தரும்.